கிராம்பு--மருத்துவக் குணங்கள்
கிராம்பு பசியைத் தூண்ட சிலருக்கு குறைந்த அளவே உணவை சாப்பிட்டாலும் செரிமானமாகாமல் இருப்பதுபோல் தோன்றும். இவர்களுக்கு பசியே இருக்காது. இவ...
பசியைத் தூண்ட
சிலருக்கு குறைந்த அளவே உணவை சாப்பிட்டாலும் செரிமானமாகாமல் இருப்பதுபோல் தோன்றும். இவர்களுக்கு பசியே இருக்காது. இவர்கள் தினமும் உணவில் கிராம்பு சேர்த்துவந்தால் செரிமான சக்தி அதிகரித்து நன்கு பசியெடுக்கும்.
பித்தம் குறைய
வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தால் தான் மனித உடலின் செயல்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன. இதில் எதன் நிலை மாறினாலும் உடலில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றில் அதிகம் நிலைமாறுவது பித்த நீர்தான். பித்த அதிகரிப்பு ஏற்பட்டு உடலில் பல நோய்கள் உண்டாகும். இந்நிலை மாற கிராம்பு சிறந்த மருந்தாகும்.
பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.
பல்வலி நீங்க
பல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை உபயோகப்படுத்துவார்கள். இது தொடர்ந்தால் பல பக்க விளைவுகள் உண்டாகும். சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி.
கிராம்பை நசுக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி உடனே குணமாகும். ஆனால் இது நிரந்தர தீர்வல்ல. உடனே மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவம் செய்துகொள்வது நல்லது.
வாந்தி நிற்க
பேருந்துகளில் பயணம் செய்பவர்களக்கு சில சமயங்களில் வாந்தி ஏற்படும். மலை ஏறுபவர்கள் சிலக்கு வாந்தி உண்டாகும். இவர்கள் கிராம்பை வாயில் போட்டு இலேசாக மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி நிற்கும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாக
வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
வறட்டு இருமல் நீங்க
வறட்டு இருமல் உள்ளவர்கள் கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.ஸ் சீன மருத்துவத்தில் கிராம்பின் பங்கு அதிகம். சிறுநீரகம், மண்ணீரல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிரம்பையே அதிகம் பயன் படுத்துகின்றனர்.
தலைபாரம் நீங்க
கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும்
தொண்டைப்புண் ஆற
கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைத்து சாறு இறக்கினால் தொண்டைப்புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும்.
கிராம்பு, நிலவேம்பு இவற்றை சம அளவாக எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் உடல் அசதி நீங்கும். சுரத்திற்குப் பின் உண்டாகும் களைப்பைப் போக்கும்.
கிராம்பு, சுக்கு வகைக்கு 5 கிராம் எடுத்து அதனுடன் ஓமம், இந்துப்பு வகைக்கு 6 கிராம் எடுத்து சூரணம் செய்து தேனுடன் கலந்து கொடுத்தால் உணவு நன்றாக செரிமானமாகும்.
தோலில் உண்டாகும் படைகளுக்கு
கிராம்பை நீர்விட்டு அரைத்து படைகள் உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் தோலில் உண்டான படைகள் மறைந்துபோகும்.
கிராம்புத் தைலம்
கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணையே கிராம்பு தைலம் என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல மணமுள்ளதாக இருக்கும். நாவில் பட்டால் உடனே சிவக்கும். இந்த கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.
Post a Comment