மிக்சர் வடை -- சமையல் குறிப்புகள்
வடைகளில் எத்தனையோ வகை உண்டு. ஆனால், இது என்ன மிக்சர் வடை என்கிறீர்களா? இதோ தெரிந்துகொள்ளுங்...

என்ன தேவை?
பச்சரிசி - 100 கிராம்
துவரம்பருப்பு - 400 கிராம்
கடலைப்பருப்பு - 200 கிராம்
உளுந்தம் பருப்பு - 150 கிராம்
மிளகாய் வற்றல் - 10
தேங்காய் - 1 மூடி
முந்திரிப்பருப்பு - 10
நெய் - 20 கிராம்
எண்ணெய் - 1 கிலோ
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படி செய்வது?
முந்திரிப்பருப்பைப் பொடியாக நறுக்கிக் கொண்டு தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள்.
பிறகு இரண்டையும் சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள்.
பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு ஆகியவற்றைத் தனித்தனிப் பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.
அவை நன்கு ஊறியதும் எடுத்து அவற்றுடன் மிளகாய் வற்றலையும் உப்பையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வடை பதத்திற்குக் கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அந்த மாவுக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி அதில் போட்டுச் சிவக்க வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
Post a Comment