வாழைக்காய் வடை--சமையல் குறிப்புகள்
வாழைக்காய் வடை வாழைக்காயில் வடை செய்யலாம். அது எப்படி என்று நாங்கள் சொல்கிறோம். செய்து பாருங்கள். தேவையான...

| ||||||||
தேவையான பொருட்கள் :
பெரிய வாழைக்காய் - 1
பொட்டுக் கடலை - 2 ஆழாக்கு
பச்சை மிளகாய் - 10
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 கப்
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
1. வாழைக்காயை முழுதாக தோலுடன் குக்கரில் ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைக்கவும். ( வெயிட் போடாமல் )
2. வெந்த பிறகு, மேல் தோலை எடுத்துவிட்டு துறுவிக் கொள்ளவும்.
3. பொட்டுக்கடலையோடு மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து கரகரப்பாக வடைக்கு அரைப்பது போல அரைக்கவும்.
4. அதோடு துறுவிய வாழைக்காய், அரிந்த வெங்காயம், அரிந்த கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கவும்.
6. எண்ணெய் காய்ந்ததும் முதலில் ஒரு சிறிய நெல்லிக்காயளவு புளியைப் போடவும்.
7. புளி கருகியதும் எடுத்துவிடவும்.
8. பிறகு அந்த எண்ணெயில் மாவை மசால் வடை போல தட்டிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். வடையை சூடாகப் பரிமாறவும்.
Post a Comment