வத்தக்குழம்பு --சமையல் குறிப்புகள்
வத்தக்குழம்பு வத்தக் குழம்பு வைப்பதில் பல்வேறு வகை உண்டு. அதில் ஒன்று இங்கு உங்களுக்காக. தேவையான பொருள் ...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_3924.html
| ||||||||
வத்தக் குழம்பு வைப்பதில் பல்வேறு வகை உண்டு. அதில் ஒன்று இங்கு உங்களுக்காக.
தேவையான பொருள்
புளி - எலுமிச்சங்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - முக்காள் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
பெருங்காயம், கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் துண்டுகள் - 1 கப்
குழம்பு தாளிக்கும் வடாம் - சிறிதளவு
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி, கறிவேப்பிலை
எண்ணெய் - தாளிக்க
செய்யும் முறை
குழம்பு பாத்திரத்தில், எண்ணெயைவிட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், இரண்டாகக் கிள்ளி வைத்துள்ள மிளகாய்வற்றல் இவைகளுடன் கடலையை அல்லது கடலைப் பருப்பை போட்டு, சிவக்க வறுக்கவும்.
தேங்காய்த் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து, கறிவேப்பிலையையும் போட்டு வறுத்து, புளியைக் கரைத்துவிடவும்.
அதில் தேவையான அளவு உப்பைப் போட்டு, நறுக்கிய பச்சைக் கத்தரிக்காய் அல்லது வெந்த கருணைக் கிழங்குத் துண்டங்களைப் போட்டு, நன்றாகக் கொதித்து வற்றியபின் 1 தேக்கரண்டி அரிசிமாவைக் கரைத்து விடவும்.
குழம்பு நன்கு கொதித்தபின் கீழே இறக்கவும். வடாத்தை வறுத்துப் போட்டுக் கலந்துவிடவும்.

Post a Comment