வெந்தயத் துவையல் --துவையல்கள்
வெந்தயத் துவையல் உடலுக்கு மிகவும் ஏற்றது. செய்வதற்கு மிகவும் எளிதானது. தேவையான பொருட்கள் : வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன் சிகப்...

தேவையான பொருட்கள் :
வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 7
புளி - நெல்லிக்காயளவு
வெல்லம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - வதக்க, மற்றும் சாதத்தில் விட்டு சாப்பிட
உப்பு - தேவைக்கேற்ப
செய்யும் முறை :
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் போட்டு பதமாக வறுத்து எடுக்கவும். அதிகம் வறுத்துவிட்டால் கசந்துவிடும். எனவே லேசாக வறுத்தெடுக்கவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயையும் எண்ணெயில் போட்டு பொறித்துக் கொள்ளவும்.
மிக்சியில் அல்லது அம்மியில் வெந்தயத்துடன், ஊறவைத்த புளி, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து `மை' போல அரைக்கவும்.
கடைசியாக சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
வெந்தயத் துவையலை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தேவைக்கேற்ப சேர்த்து கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
இந்த துவையலை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, அஜீரணம் போன்றவற்றிற்கு நல்ல குணம் கிடைக்கும்.
Post a Comment