ஈஸியான என்.ஆர்.ஐ. அக்கவுன்ட்!---உபயோகமான தகவல்கள்
ஈஸியான என்.ஆர்.ஐ. அக்கவுன்ட்! வங்கிக் கணக்கு அண்மைக் காலமாக நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவதும், அங்கு ப...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_496.html
ஈஸியான என்.ஆர்.ஐ. அக்கவுன்ட்!
வங்கிக் கணக்கு
அண்மைக்
காலமாக நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவதும்,
அங்கு பிஸினஸ் தொடங்குவதும் சர்வசாதாரணமாகிவிட்டது. அப்படி போகிறவர்கள்
பணப் பரிவர்த்தனை செய்வதற்காகவே பிரத்யேகமான வங்கிக் கணக்குகளை இந்தியாவில்
தொடங்கி பயன்பெற முடியும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர்
என்னென்ன வங்கிக் கணக்குகளைத் தொடங்கலாம்? என்று சொல்கிறார்கள் நிதி
ஆலோசகர்கள் ராமலிங்கம் - ராஜன்
(gn Currency Non Resident a/c - FCNR) என்ற கணக்கைத் தொடங்கலாம். இனி நாம் இந்த மூன்று கணக்குகளைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.
என்.ஆர்.ஓ. அக்கவுன்ட்!
இந்தக் கணக்கை ஒரு நபர் என்.ஆர்.ஐ. ஆன பிறகோ அல்லது என்.ஆர்.ஐ. ஆவதற்கு
முன்போ தொடங்கலாம். இது இந்திய ரூபாயின் மதிப்பில் தொடங்கப்படும். இதனை
நாம் சேமிப்பு கணக்காகவோ அல்லது டெபாசிட் ஆகவோ தொடங்கலாம். ஒரு நபர்
என்.ஆர்.ஐ. ஆன பிறகு அவரு டைய சாதாரண சேமிப்புக் கணக்கை என்.ஆர்.ஓ.
அக்கவுன்டாக மாற்றிக் கொள்ளலாம். இந்த கணக்கை மற்றொரு என்.ஆர்.ஐ. மூலம்
கூட்டாகவும் தொடங்கலாம்.ஒரு என்.ஆர்.ஐ. இந்திய ரூபாயில் மட்டும்தான் பரிவர்த்தனை செய்ய விரும்பு கிறார் மற்றும் ஆண்டுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை மாற்றம் செய்ய விரும்புகிறார் என்றால் அவர் என்.ஆர்.ஓ. அக்கவுன்டை உபயோகிக்கலாம்.
என்.ஆர்.இ. அக்கவுன்ட்!
இதில் இருக்கும் பணத்தை நாம் அந்நிய நாட்டுப் பணமாக மாற்றிக் கொள்ளலாம். அதாவது, இந்த கணக்கின் மூலம் எந்த ஒரு நாட்டின் கரன்சிக்கும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். அதைப் போல எந்த நாட்டின் கரன்சியையும் இந்த அக்கவுன்டில் வரவு வைத்துக் கொள்ளலாம். ஒரு என்.ஆர்.இ. அக்கவுன்டிலிருந்து என்.ஆர்.ஓ. அக்கவுன்டுக்கு பணத்தை மாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த கணக்கின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரி ஏதும் கிடையாது. ஒரு என்.ஆர்.ஐ. மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய பிறகு, என்.ஆர்.இ. அக்கவுன்டை சாதாரண சேமிப்புக் கணக்காக மாற்றிக் கொள்ளலாம்.
ஒருவர் வரியில்லா வருமானம் மற்றும் தனது பணத்தை வெளிநாட்டு கரன்சியாக மாற்றிக் கொள்ள விரும்பினாலோ அவர் என்.ஆர்.இ. அக்கவுன்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எஃப்.சி.என்.ஆர். டெபாசிட்!
டெபாசிட் முதிர்வின்போது அசல் மற்றும் வட்டி எந்த நாட்டின் ரூபாயின் மதிப்பில் முதலீடு செய்துள்ளோமோ அதே நாணய மதிப்பில் திருப்பி வழங்கப்படும். இதனால் அந்நிய செலாவணியால் ஏற்படும் மாற்றத்திற்கு இந்த முதலீடுகள் பாதிப்படையாது. இந்த டெபாசிட் மூலம் கிடைக் கும் வருமானத்துக்கு வரி கிடையாது.
ஒருவர் அந்நிய செலாவணியால் ஏற்படும் மாற்றத்திற்கு தன்னுடைய முதலீடு பாதிப்படைய கூடாது மற்றும் வரியில்லா வருமானமும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் அவர் எஃப்.சி.என்.ஆர். டெபாசிட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.''
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் என்னென்ன கணக்குகளை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டோம். இந்த கணக்கை இதுவரை தொடங்காதவர்கள் இனி தாராளமாக தொடங்கலாமே!
Post a Comment