விளாவுக்கு எடுக்கலாம் விழா! --பழங்களின் பயன்கள்

விளாவுக்கு எடுக்கலாம் விழா! உ ணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு மிகச் சரியான உதாரணம், விளாம்பழம். இனிப்...

விளாவுக்கு எடுக்கலாம் விழா!


ணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு மிகச் சரியான உதாரணம், விளாம்பழம். இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியோடு, இனிய மணத்தோடு இருக்கும் விளாம்பழத்தில் மருத்துவ மகத்துவங்களும் அதிகம். விளா மரத்தின் ஒவ்வொரு பாகமும் அபூர்வமான மருத்துவ குணங்கள் அடங்கியதே.
மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் உள்ள திருநின்றியூர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் தல விருட்சம் இதுதான். இந்த மரத்தின் பழங்களைக் குரங்குகள் விரும்பிச் சாப்பிடுவதால், வட மொழியில் 'கபி ப்ரியா’ என்றும் ஆங்கிலத்தில், 'மங்கி ட்ரீ’ என்றும் விளா மரத்துக்குப் பெயர்கள் உண்டு. சுத்தியால் உடைத்துத்தான் விளாம்பழத்தின் ஓட்டை உடைக்க முடியும். உள்ளே இருக்கும் பிசின் போன்ற சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். சிலர் சர்க்கரை அல்லது தேங்காய்ப் பால் மற்றும் வெல்லத்துடன் பானமாக்கி, குடிப்பதும் உண்டு. விளா மரத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி பட்டுக்கோட்டை சித்த மருத்துவர் பாலசங்கரியிடம் கேட்டோம். அத்தனைவிதமான பலன்களையும் ஆர்வத்தோடு விவரித்தார்.
விளா மரத்தின் இலை, காய், பழம், பழத்தின் ஓடு, பட்டை, பிசின், வேர் ஆகியவை மருத்துவப் பயன்பாடு கொண்டவை.
இலை: துளிர் இலைகளின் சாற்றைப் பால் மற்றும் சர்க்கரையுடன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஜீரணக் கோளாறுகள் குணமாகும். இலைகளைக் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெயை சொறி, சிரங்கு உள்ள இடத்தில் தடவிவந்தால், குணம் கிடைக்கும். இலையின் கொழுந்தைக் குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், வயிற்றில் உள்ள வாயு நீங்கும்; பசி உண்டாகும். இலைச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து குடித்தால், காய்ச்சல் குணமாகும். இலையைக் குடிநீரில் போட்டுக் கொடுத்தால், குழந்தைகளின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
பழம்: 100 கிராம் எடை கொண்ட விளாம்பழக் கூழில் முக்கால் பங்கு நீர் இருக்கிறது. புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்களுடன் ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் சத்தும் இருக்கிறது. கல்லீரல் மற்றும் இதயத்துக்கு வலு சேர்க்கும் டானிக் இந்தப் பழம். இருமல், கோழை உண்டாகுதல் போன்றவையும் குணமாகும். பழத்தினைப் பாகு செய்து சாப்பிட்டால், பித்த நோய்கள் தீரும். குடல் புண் மற்றும் மூல வியாதிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் விளாம்பழத்துக்கு உண்டு. சிலருக்கு வாயில் எப்போதும் உமிழ்நீர் ஊறிக்கொண்டே இருக்கும். அவர்கள் விளாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நல்ல குணம் கிடைக்கும். பல் ஈறுகளில் உள்ளப் புண்களைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு. பழத்தின் சதையுடன் திப்பிலி சூரணம் கலந்து சாப்பிட்டால், மூச்சிரைப்பு மற்றும் தொடர் விக்கல் ஆகியவை குணமாகும். இவ்வளவு பயன்கள் இருப்பதால், விளாம்பழத்தைக் காயகல்பம் என்றும் சொல்வார்கள்.
காய்: விளாங்காய் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு நல்ல மருந்து. தொண்டைப் புண், தொடர் விக்கல் மற்றும் ஈறு சம்பந்தமான பிரச்னைகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. விளாங்காய்ப் பச்சடி, வாய்ப் புண்ணைக் குணமாக்கும்.
பிசின்: விளா மரப் பட்டையில் இருந்து வெளிவரும் நிறமற்ற பிசினைப் பொடித்து, தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாகும். ஒரு துண்டுப் பிசினை வாயில் போட்டு, அதில் இருந்து வரும் சாற்றை விழுங்கிக்கொண்டு இருந்தால், வறட்டு இருமல், நெஞ்சு எரிச்சல் ஆகியன தீரும். வெள்ளைப்படுதலுக்கும் விளாம் பிசின், நல்ல மருந்து.
வேர்: பாம்புக் கடியின் வீரியத்தைக் குறைக்கவல்லது. விளா வேர், பூலா வேர், லவங்கம், காட்டுமல்லி வேர் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, எருமை மோரில் வேகவைத்துத் தயிரில் கலந்து அருந்திவந்தால், சர்க்கரை நோய் கட்டுப்படும்.
விதை: விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மலமிளக்கியாகச் செயல்படும்.
இவ்வளவு மருத்துவப் பயன்களை அள்ளி வழங்கும் விளாவுக்கு விழாவே எடுக்கலாம்!

Related

பழங்களின் பயன்கள் 5024712991062667631

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item