பிளாக்கரில் விளம்பரங்கள் வைக்க சூப்பர் ட்ரிக்...கணிணிக்குறிப்புக்கள்
பிளாக்கரில் விளம்பரங்கள் வைக்க சூப்பர் ட்ரிக்... வணக்கம் நண்பர்களே.. பிளாக்கரில் ஒரு பயனுள்ள வசதி.. விளம்பரங்கள் வைப்பது. நம்முடைய...

பிளாக்கரில் விளம்பரங்கள் வைக்க சூப்பர் ட்ரிக்...
அவ்வாறு பெற்ற ஆட்சென்ஸ் கோடிங்கானது(Ad sense coding) பெரும்பாலும் JAVA SCRIPT அடிப்படையாகக் கொண்டிருக்கும். நேரடியாக அந்த நிரல்வரிகளை டெம்ப்ளேட்டின் நிரல்வரிகளுடன் இணைக்கும் போது அவை வேலை செய்யாது. இவ்வாறு வேலை செய்யாத கோடிங்குகளை பிளாக்கரின் டெம்ப்ளேட்டிற்கு (xml Blogger template) ஏற்றவாறு இந்த விளம்பர நிரல்வரிகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் அந்நிறுவனத்தாரின் விளம்பரங்கள் உங்களுடைய பிளாக்கர் தளத்தில் தெரியும்.
அந்த வகையில் உங்கள் விளம்பர நிரல்வரிகளை பிளாக்கருக்கு ஏற்றவாறு கன்வர்ட் செய்ய ஒரு தளம் உள்ளது. இந்த தளத்திற்கு சென்று http://www.eblogtemplates.com/blogger-ad-code-converter/ அதிலுள்ள பெட்டியில் உங்கள் விளம்பர கோடிங்குகளை கொடுத்து பிளாக்கருக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ளலாம். அதாவது encode செய்துகொள்ளலாம். பிறகு மாற்றப்பட்ட நிரல்வரிகளை உங்கள் பிளாக்கரின் வார்ப்புருவில் வேண்டிய இடத்தில் சேர்த்து விடுங்கள். இப்போது உங்கள் விளம்பரங்கள் தளத்தில் அருமையாக காட்சியளிக்கும்
Encoding என்ற வுடனேயே இந்த தளமும் நினைவுக்கு வருகிறது. நான் அடிக்கடி பயன்படுத்தும் தளமும் கூட.. www.centricle.com என்ற தளத்தில் tools என்ற ஆப்சனைக் கிளிக் செய்து தோன்றும் பெட்டியில் உங்கள் விளம்பர நிரல்வரிகளைக் கொடுத்து encode, decode செய்து கொள்ளமுடியும்.
இந்த தளத்தில் நேரடியாக உங்கள் விளம்பர கோடிங்கை convert செய்ய இந்த இணைப்பில் செல்லவும்.
நீங்கள் கூகுள் ஆட்சென்ஸ் போன்றவைகளைப் பயன்படுத்தினாலும் இந்த மாற்றங்கள் AdSense program policies க்கு எதிரானது அல்ல. அதாவது இதனால் ஆட்சென்ஸ் கணக்கு முடக்கப்படுமோ என்று அச்சப்படத் தேவையில்லை. Xml blogger -க்கு ஏற்றவகையில் adsense coding-ஐ அதற்குத் தகுந்தவாறு மாற்றுகிறோம்.. அவ்வளவே.. இதையே தளத்தில் page source சென்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். page source -ல் விளம்பர நிறுவனம் அளித்த ஒரிஜினல் விளம்பர நிரல்வரிகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே காட்டும்.
இவ்வாறு encoding செய்யும் போது HTML ஸ்பெஷல் கேரக்டர்கள் <, >, & போன்றவை <, >, & இவ்வாறு மாற்றப்படுகிறது. அவ்வளவே..!!!!
இனி உங்களுக்கு கொடுக்கப்பட்ட விளம்பர நிரல்வரிகளை உங்கள் தளம், வலைப்பூவில் உள்ளிட்டு, கணிசமான வருவாய் ஈட்டுங்கள்... வாழ்த்துகள் நண்பர்களே...!!!
Read more: http://www.thangampalani.com/2012/05/blogger-ad-code-converter-for-your-ads.html#ixzz1wKSQNal9
Post a Comment