கசகசா ஆல்மண்ட் பூரி--சமையல் குறிப்புகள்
கசகசா ஆல்மண்ட் பூரி தேவையானவை: கசகசா 2 கப், பாதாம்பருப்பு அரை கப், பச்சரிசி மாவு 1 கப், சீனி 4 கப், குங்குமப்பூ அரை டீஸ்பூன், முந...

கசகசா ஆல்மண்ட் பூரி
தேவையானவை:கசகசா 2 கப், பாதாம்பருப்பு அரை கப், பச்சரிசி மாவு 1 கப், சீனி 4 கப், குங்குமப்பூ அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 25 கிராம், கிஸ்மிஸ் சிறிது, கோதுமை மாவு 4 கப், நெய் (நல்ல நெய்) 4 கப், பால் சிறிதளவு.
செய்முறை:
கசகசாவை ஊற வைக்கவும். பாதாம்பருப்பை வெந்நீரில் ஊறப் போட்டு தோலை நீக்கவும். கசகசாவையும் பாதாம்பருப்பையும் கல் உரல் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
சர்க்கரையை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சவும். அதில் கசகசா, பாதாம்பருப்பு அரைத்த விழுதையும் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். முந்திரிப்பருப்பையும், கிஸ்மிஸ்ஸையும் சிறு துண்டுகளாக்கவும். அத்துடன் குங்குமப் பூவையும் சேர்த்து அரைத்து, கிளறிய விழுதுடன் கலக்கவும். இதுதான் பூரணம்.
கோதுமை மாவை தண்ணீர் விட்டு, பாலும் சேர்த்து நன்றாக மெதுவாக வரும் வரை பிசையவும். நன்றாக அடித்துப் பிசைந்த கோதுமை மாவை அப்பளம் போட்டு, சிறிது நெய், அரிசி மாவு கலந்து, தடவி, சுருட்டி, துண்டுகளாக நறுக்கி, அப்பளம் போல் போடவும்.
அப்பளத்தின் மேல் கசகசா பூரணத்தைப் பரப்பி, மேலே மற்றொரு அப்பளத்தை வைத்து நன்றாகச் சேர்த்து சோமாசிக் கரண்டியால் ஓரங்களை நறுக்கவும். பின் தேவையான அளவு நெய்யை காயவைத்து பொரித்தெடுக்கவும். சுவை நிறைந்த பூரி ரெடி.
கசகசா பிடிக்காதவர்கள், வெறும் பாதாம், முந்திரியை மட்டும் வைத்து செய்யலாம். நெய் பிடிக்காதவர்கள், எண்ணெயில் பூரிகளைப் பொரிக்கலாம்
***************************************************
Post a Comment