நம்ம டிரைவர் நல்ல ஆளா?--உபயோகமான தகவல்கள்,

நம்ம டிரைவர் நல்ல ஆளா? கைகொடுக்கும் யோசனைகள் பல லட்ச ரூபாய் கொடுத்து, பார்த்து பார்த்து நமக்குப் பிடித்த காரை வாங்குகிறோம். சந்தோஷம்... ச...


நம்ம டிரைவர் நல்ல ஆளா?

கைகொடுக்கும் யோசனைகள்
பல லட்ச ரூபாய் கொடுத்து, பார்த்து பார்த்து நமக்குப் பிடித்த காரை வாங்குகிறோம். சந்தோஷம்... சரி, தகுதியான டிரைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

டிரைவராக நியமிக்கப்படும் நபர் தவறான ஆசாமியாக இருந்து விட்டால் நினைத்துப் பார்க்க முடியாத விபரீதங்கள் எல்லாம்கூட நடந்துவிட வாய்ப்பு உண்டு. எனவே, டிரைவரைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

டிரைவர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒரு சாதாரண டிரைவராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்றைக்கு பல நூறு டிரைவர்கள் வேலை செய்யும் ஒரு டிராவல்ஸ் கம்பெனிக்கு அதிபராக இருக்கும் ‘பாலா டிராவல்ஸ்’  தரும் அனுபவப் பாடம் இது...

‘‘டிரைவராக வேலை கேட்டு வருபவர், இதற்கு முன்பு எங்கு வேலை செய்தார்? வேலை செய்த இடத்திலிருந்து ஏன் வெளியேறினார், என்று விசாரிக்க வேண்டும். அவர் வேலை செய்த இடங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் (முகவரி, தொலைபேசி எண்கள் உட்பட) வாங்கிக்கொண்டு இரண்டு நாள் கழித்து வரச் சொல்ல வேண்டும். அதற்குள், அவர் கொடுத்த முகவரிக்கு போன் செய்து ஆள் யார்? எப்படி? ஏன் வேலையை விட்டு நின்றார் என்பதையெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம். தகவல்கள் திருப்தி அளித்தால் அவரை வேலைக்கு வரச் சொல்லலாம்.

ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களையும், சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. நாளைக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அடையாளம் சொல்லவும், முகவரியைத் தெரிந்து கொள்ளவும் இந்த ஆதாரங்கள் பயன்படும்.

டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறதா? ஒரிஜினல்தானா என்பதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால், காவல்துறையில் ‘நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ்’ பெற்று வரச் சொல்லலாம். ஆனால், அது டிரைவரின் தன்மானத்தைச் சோதிப்பதாக இருக்கக் கூடாது.

குறளகம் எங்கே இருக்கிறது? எழிலகம் எங்கே இருக்கிறது? விழுப்புரத்துக்கு எப்படிப் போவது? பெல்ஸ் ரோடு செல்ல வழி எது? ஊரில் எங்கெங்கே யு&டர்ன் இருக்கிறது என்பன போன்ற விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்கிறதா என்பதைக் கேள்விகள் கேட்டு சோதித்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், டிரைவரை சில கிமீ தூரம் காரை ஓட்டச் சொல்லிப் பார்ப்பது நல்லது. நெருக்கடி நிறைந்த சாலைகளில் எப்படி ஓட்டுகிறார்? எதிரே வருபவர்களை எப்படிச் சமாளிக்கிறார்? டிராஃபிக் விதிகளைச் சரியாகக் கடைபிடிக்கிறாரா? என்பதையெல்லாம் கவனித்து டிரைவரின் திறமையைக் கணக்கிட அது வசதியாக இருக்கும்.



டிரைவருக்கு ஓரளவு கார் மெக்கானிசம் தெரிந்திருந்தால் நல்லது. ஆனால், இன்றைய நவீன யுக வண்டிகளில் ஏற்படும் ரிப்பேர்களை டிரைவர்களால் சரி செய்ய முடியாது. சர்வீஸ் சென்டருக்குத்தான் போன் செய்ய வேண்டும். அதனால், குறைந்த பட்சம் கார் சக்கரத்தைக் கழற்றி ஸ்டெப்னியை மாற்றத் தெரிந்திருந்தால் போதுமானது.

டிரைவர் நாகரிகம் தெரிந்தவரா? நேர்மையானவரா? ஒழுக்கமாக நடந்துகொள்வாரா என்பதையெல்லாம் பார்த்த உடனே தெரிந்துகொள்ள முடியாது. பழகித்தான் தெரிந்துகொள்ள முடியும்.

டிரைவரின் நேர்மையைச் சோதிக்க, அவர் அறியாதபடி சில சோதனைகளைச் செய்யலாம். காரில் சில ரூபாய் தாள்களை தெரியாததுபோல் விட்டுச் சென்றுவிட்டு, அதை எடுத்துத் திருப்பிக் கொடுக்கிறாரா? இல்லை, அவரே வைத்துக்கொள்கிறாரா? என்று கவனிக்க வேண்டும். ஆயினும் அவரும் மனிதர்தான், அவருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொண்டு அவரைக் காயப்படுத்தாமல் இந்தத் தேர்வுகளை நடத்த வேண்டும்.

உங்களின் அனைத்து தேர்வுகளிலும் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றால், அதன் பிறகு அவரைச் சந்தேகப்படக் கூடாது...இதுதான் முக்கியமான பாடம்!’’
 

Related

உபயோகமான தகவல்கள் 8913912270136973093

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item