சேனைக்கிழங்கு பிரட்டல்--சமையல் குறிப்பு
சேனைக்கிழங்கு பிரட்டல் தேவையான பொருள்கள் : பெரிய வெங்காயம் நறுக்கியது - 150 கிராம், அரைத்த தக்காளி - 200 கிராம், சின்ன வெங்காயம் - 1...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_7701.html
சேனைக்கிழங்கு பிரட்டல்
தேவையான பொருள்கள் :
பெரிய வெங்காயம் நறுக்கியது - 150 கிராம்,
அரைத்த தக்காளி - 200 கிராம்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
சேனைக்கிழங்கு - 1/4 கிலோ,
மிளகு - 100 கிராம்,
கடுகு, உளுந்து - 25 கிராம்,
கறிவேப்பிலை 2 கொத்து,
சோம்பு, சீரகம் - 20 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 25 கிராம்,
நிலக்கடலை - 100 கிராம்,
மஞ்சள் தூள் - 25 கிராம்,
மிளகாய்த் தூள் - 50 கிராம்,
மல்லித் தூள் - 50 கிராம்,
எண்ணெய் - 150 மில்லி,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
சேனைக்கிழங்கைச் சுத்தப்படுத்தி, சின்னச் சின்ன சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நிலக்கடலை, மஞ்சள் தூள், மிள காய்த் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்றாக வதக்கியபின் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சிறிது கடுகு, உளுந்து, சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் மிளகுப் பொடி சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
மசாலாவை சுண்ட விடவும். சதுரமாக நறுக்கிய சேனையை வேகவைத்து பொரித்து எடுத்து அதனுடன் சேர்த்து நன்றாகப் பிரட்டவும்.
உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாகப் புரட்டி எடுக்கவும்.
சூப்பர் சுவையுள்ள சேனைக்கிழங்கு பிரட்டல் தயார்!
---------------------------------------------------------------------------------------
Post a Comment