30 நாள் 30 வகை ஸ்கூல் லன்ச்!

30 வகை ஸ்கூல் லன்ச்! வெஜிடபிள் ரொட்டி தேவையானவை: பொடியாக நறுக்கிய கோஸ் - அரை கப், குட-மிளகாய் - 1, துருவிய கேரட் - அரை கப், வெங்-காயம்...

30 வகை ஸ்கூல் லன்ச்! வெஜிடபிள் ரொட்டி தேவையானவை: பொடியாக நறுக்கிய கோஸ் - அரை கப், குட-மிளகாய் - 1, துருவிய கேரட் - அரை கப், வெங்-காயம் - 1, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், சப்பாத்தி - 5 முதல் 6. செய்முறை: குடமிளகாய், வெங்-காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன், துருவிய கேரட், நறுக்கிய கோஸ், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து லேசாக எண்ணெய் விட்டு வதக்கவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மேலும் இந்தக் கலவையை கொஞ்சம் பரத்தி, 'ரோல்' செய்யவும். காய்கறி சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகள்கூட இந்த வெஜிடபிள் ரொட்டியை நொடியில் சாப்பிட்டு விடுவார்கள். ****************************************************************** சர்க்கரைவள்ளி இடியாப்பம் தேவையானவை: வேகவைத்து தோல் உரித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 4, தூள் வெல்லம் - ஒரு கப், வறுத்த முந்திரி துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: வேகவைத்த கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் தூள் வெல்லத்தைச் சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இதை ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து, முந்திரி துண்டுகள், தேங்காய் துருவல் தூவி சாப்பிடவும். *********************************************************** எள் நூடுல்ஸ் தேவையானவை: வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன், நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், கேரட், பீன்ஸ் - தலா கால் கப், பூண்டு - 4 பல், நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, . செய்முறை: கொதிக்கும் நீரில் நூடுல்ஸை போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி, சிறிது நேரம் ஆறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் எள்ளைப் போட்டு வறுக்கவும். பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு. உப்பு சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது ஆற வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து, மேலும் 2 நிமிடம் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும். ********************************************************* வெஜிடபிள் மேக்ரோனி தேவையானவை: வேக வைத்த மேக்ரோனி - 2 கப், எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வேக வைத்து உதிர்த்த சோளம் - அரை கப், வெங்காயம் - 1, குடமிளகாய் - 1, பூண்டு - 6 முதல் 7 பல், பெரிய தக்காளி - 1, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும். பிறகு சோளம், குடமிளகாய், தக்காளி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்துள்ள மேக்ரோனி, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். தக்காளி சாசுடன் சுடச்சுட பரிமாறவும். *********************************************************** கேரட்-கொத்தமல்லி ரைஸ் தேவையானவை: வடித்த சாதம் - 2 கப், துருவிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய பீன்ஸ் - கால் கப், சீரகம், எள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டேபிள்ஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சீரகம், எள், கடலைப்பருப்பு, மிளகு, பட்டையை சிறிது எண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் காய்கறிகளை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், சாதத்தை சேர்க்கவும். அதில் வறுத்து அரைத்த பொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். ********************************************************* பீட்ரூட் சென்னா தேவையானவை: ஊற வைத்து வேக வைத்த வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், பீட்ரூட் துருவல் - அரை கப், நறுக்கிய வெள்ளரி துண்டுகள் - கால் கப், நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வேக வைத்த கடலை, பச்சைமிளகாய், பீட்ரூட் துருவலை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், நறுக்கிய வெள்ளரி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும். ********************************************************** உருளைக்கிழங்கு ஃப்ரைடு ரைஸ் தேவையானவை: வேக வைத்து தோல் உரித்து சதுரங்களாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 2 கப் (எண்ணெயில் மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1, நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2 அல்லது 3, சாதம் - 2 கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வெடிக்க விடவும். அதில் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கி, பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். அதில் வடித்து வைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி, இறக்கும்போது வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும். ************************************************************* பாஸ்தா பிரியாணி தேவையானவை: பாஸ்தா (மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், சீஸ் - 2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலா - ஒரு டீஸ்பூன், குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 1 (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது, - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் வெண்ணெய் போட்டு உருக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அதில் நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு 3 நிமிடம் வேக விட்டு பிறகு வடிய விடவும். இதை குளிர்ந்த நீரில் அலசி சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பாஸ்தாவை கடாயில் வதங்கிக் கொண்டிருக்கும் காயுடன் சேர்த்து, உப்பு, பிரியாணி மசாலா சேர்த்துக் கிளறவும். துருவிய சீஸை தூவி பரிமாறவும். **************************************************************** கோதுமை ரவை - கீரை பொங்கல் தேவையானவை: வறுத்த கோதுமை ரவை - ஒன்றரை கப், பயத்தம்பருப்பு - அரை கப், பொடியாக நறுக்கிய கீரை - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய் - 2 முதல் 3, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தண்ணீர் - 5 கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும். இதில் கோதுமை ரவை, பயத்தம்பருப்பை சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் வேக விட்டு தனியே வைக்கவும். கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கீரையைச் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். கீரை நன்கு வதங்கியதும் வேக வைத்துள்ள கோதுமை ரவை - பருப்பு கலவையைக் கொட்டி, 2 நிமிடம் கிளறி இறக்கவும். ************************************************************ தக்காளி தோசை தேவையானவை: புழுங்கலரிசி - ஒண்ணேகால் கப், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, வெல்லத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வும். ஊறியதும் இதனுடன் தக்காளி, மிளகாய், வெல்லத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து உப்புப் போட்டு அரைக்கவும். இதில் கொத்தமல்லி சேர்த்து தோசையாக வார்க்கவும். **************************************************************** வெஜிடபிள் கப் பிரெட் தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்துக் கொள்ளவும்), பச்சை பட்டாணி, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், மிளகுத்தூள் - கால் டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் - 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், கேரட், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். பிரெட்டை தண்ணீரில் அழுத்தி, பிழிந்து எடுத்து, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.இதில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல செய்து, நடுவில் வதக்கிய காய்களை வைத்து மூடி, மிதமான தீயில் எண்ணெயில் பொரிக்கவும். ***************************************************************** சேமியா பக்கோடா தேவையானவை: சேமியா - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேமியாவை போட்டு, 2 நிமிடம் வேக விடவும். பிறகு, தண்ணீரை வடிகட்டி குளிர்ந்த நீரால் அலசி, சிறிதுநேரம் ஆற விடவும். இதில் பச்சைமிளகாய், வெங்காயம், முந்திரி துண்டுகள், சோளமாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரிக்கவும். ************************************************************** வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் தேவையானவை: கேரட் துருவல் - அரை கப், பொடி-யாக நறுக்கிய கோஸ், தக்காளி - தலா அரை கப், ஸ்பிரிங் ஆனியன் - 2 (பொடியாக நறுக்கவும்), நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய் - அரை கப், நூடுல்ஸ் - அரை பாக்கெட், தண்ணீர் - 4 முதல் 5 கப், சோளமாவு ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய காய்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு, நூடுல்ஸையும் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து, இதனுடன் சேர்க்கவும். மிளகுத்தூளும், உப்பும் சேர்த்து நன்றாகக் கலந்து, கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும். **************************************************************** மேக்ரோனி வெஜிடபிள் சாலட் தேவையானவை: வேக வைத்த மேக்ரோனி - 2 கப், ஸ்பிரிங் ஆனியன் - 2 (பொடியாக நறுக்கவும்), குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்), சிறிய சதுரங்களாக நறுக்கிய தக்காளி - அரை கப், உதிர்த்த ஸ்வீட் சோளம் - அரை கப், வேக வைத்த பட்டாணி - கால் கப், எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கள், சோளம், பட்டாணியை போட்டு நன்றாகக் கலக்கவும். பிறகு, வேக வைத்த மேக்ரோனியை சேர்க்கவும். இதில், எலுமிச்சை சாறு, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறவும். **************************************************************** உருளைக்கிழங்கு சாலட் தேவையானவை: உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து, தோல் உரித்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய லெட்யூஸ் இலை - ஒரு கப், சீஸ் க்யூப்கள் - 2 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), பிரெட் துண்டுகள் - 4, பால் - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி கெச்சப் - ஒரு டேபிள்ஸ்பூன், செய்முறை: பிரெட் துண்டுகளை சதுர துண்டுகளாக வெட்டி, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, குடமிளகாய், லெட்யூஸ் இலை-களை போட்டு, ரோஸ்ட் செய்த பிரெட் துண்டுகள், சீஸ், தக்காளி கெச்சப், பால் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். விருப்பப்-பட்டால் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். ********************************************************** பன்-நட்ஸ் பர்கர் தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோல் உரிக்கவும்), கேரட் துருவல் - அரை கப், வெங்காயம் - 2 (மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்), பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுகடலை நான்கும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக பொடித்தது - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்டீஸ்பூன், பன் - 6, உப்பு - சிறிதளவு. செய்முறை: காய்கறிகளை கலந்து கொள்ளவும். பன்னை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவும். மேலே காய்கறி கலவையில் உப்பு கலந்து பரத்தவும். இதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் பொடித்த பருப்பு கலவையையும், கொத்தமல்லி இலையையும் தூவவும். இதை பாதி பன்னால் மூடி குழந்தை-களுக்குக் கொடுக்கவும். ************************************************************** பேபி ஆலு சாட் தேவையானவை: வேக வைத்து தோல் உரித்த பேபி உருளைக்கிழங்கு - 10 முதல் 15, வெங்காயம் - 1, குடமிளகாய் - 1, தக்காளி - 1, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிதளவு. செய்முறை: வெங்காயம், குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் போட்டு, நன்றாகக் கலக்கவும். இதை கிண்ணங்களில் போட்டு, சாட் மசாலா தூவி பரிமாறவும். *************************************************************** சென்னா சாட் தேவையானவை: வேக வைத்த வெள்ளை கொண்டை கடலை - ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய பனீர் - அரை கப், வெள்ளரிக்காய் - 1 (பொடியாக நறுக்கவும்), ஸ்பிரிங் ஆனியன் - 1, தக்காளி கெச்சப் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், செய்முறை: பனீர், வெள்ளரிக்காய், ஸ்பிரிங் ஆனியன், தக்காளி கெச்சப்பை வேக வைத்த கடலையுடன் கலக்கவும். இதில் சாட் மசாலா, கொத்தமல்லி தூவி கிண்ணங்களில் பரிமாறவும். *************************************************************** ஓட்ஸ் வடை தேவையானவை: ஓட்ஸ் - முக்கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் ஓட்ஸ், வெங்காயம், மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து, பாலை ஊற்றி மிருதுவாக கலக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், மாவு கலவையை வடைகளாகத் தட்டி பொன்னிறமாக பொரிக்கவும். **************************************************************** ஸ்வீட் கார்ன்- ஓட்ஸ் கிச்சடி தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப் (மிக்ஸியில் பவுடராக்கவும்), கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -2, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வெங்காயம் - 1, தக்காளி - 1, தண்ணீர் - 2 கப், வேக வைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன் - அரை கப், எலுமிச்சை சாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, இதில் சோள முத்துக்களையும் தக்காளியையும் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், ஓட்ஸை ஒரு கையால் தூவிக் கொண்டே மறு கையால் உப்புமா கிளறுவதுபோல கிளறவும். இறக்கி வைத்து, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும். ********************************************************* உருளை டிக்கி தேவையானவை: உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து, தோல் உரிக்கவும்), பச்சை பட்டாணி - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்குடன் மற்ற பொருட்களை கலந்து, வடை போல் தட்டவும். இதை பிஸ்கெட் கட்டரால் சிறிய துண்டுகளாக வெட்டவும். 'ஃப்ரையிங் பான்'-ல் எண்ணெய் ஊற்றி, வெட்டிய துண்டுகளை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். ************************************************************ டோஃப் நட் தேவையானவை: மைதா - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஈஸ்ட் - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன், உருக்-கிய வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரைத்தூள் - அரை கப், தண்ணீர் கலந்த பால் - கால் கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை: பாலை லேசாக சூடாக்கி, ஆற விடவும். இதில் ஈஸ்ட்டையும் சர்க்கரையையும் போட்டு நன்றாகக் கலக்கி, 15 நிமிடம் ஊறவிடவும். மைதாவுடன் பேக்கிங் பவுடர், வெண்ணெய் சேர்த்து கையில் ஒட்டாத அளவுக்கு கெட்டியாக பிசையவும். இதை மெல்லிய துணியில் மூடி 20 நிமிடம் ஊற விடவும். ஊறிய மாவிலிருந்து சிறிது எடுத்து, சப்பாத்திபோல தேய்த்து, சிறிய வட்ட மூடியால் வெட்டவும். இதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். லேசாக ஆறியதும், சர்க்கரைத்தூளில் புரட்டி பரிமாறவும். ****************************************************** ஃப்ரெஷ் வெஜ் சாண்ட்விச் தேவையானவை: ஹாட் டாக் ரோல்ஸ் (பிரெட் கடைகளில் கிடைக்கும்) - 2 முதல் 4 (இது நீளவாக்கில் பன் போல் இருக்கும்), கேரட், பீட்ரூட் துருவல் - ஒன்றரை கப், எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன், லெட்யூஸ் இலை - சிறிதளவு, சீஸ் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் கேரட், பீட்ரூட் துருவல், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். ஹாட் டாக் ரோலை நீளவாக்கில் பாதியாக நறுக்கவும். கீழ்பாதியில் சிறிது வெண்ணெய் தடவி, அதன்மேல் ஒரு லெட்யூஸ் இலையை பரத்தவும். அதன் மேல் சீஸை பரப்பி, காய்கறி கலவையை வைத்து, மேலே மறுபாதி ரோலால் மூடி பரிமாறவும். ************************************************************** ஜாம் வீல்ஸ் தேவையானவை: பெரிய பிரெட் துண்டுகள் - 4, வெண்ணெய் - சிறிதளவு, ஏதாவது ஒரு பழ ஜாம் - தேவையான அளவு. செய்முறை: பிரெட்டின் ஓரங்களை வெட்டவும். ஓவ்வொரு பிரெட் துண்டிலும் வெண்ணெயைத் தடவவும். இதன் மேல் ஜாமை தடவி, பாய்போல சுருட்டவும். இதை சிறிய துண்டுகளாக்கி பரிமாறவும். இதேபோல பிரெட் மேல் துருவிய பனீரை தூவி, அதன்மேல் ஏதாவது ஒரு சட்னியை தடவியும் சாப்பிடலாம். *************************************************************** ஓட்ஸ் கட்லெட் தேவையானவை: ஓட்ஸ் - ஒன்றரை கப், உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து, தோல் உரித்து, மசிக்கவும்), துருவிய பனீர் - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு - கால் டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, செய்முறை: ஒன்றரை கப் ஓட்ஸில் அரை கப் ஓட்ஸை தனியே எடுத்து வைக்கவும். மற்ற பொருட்களுடன் ஒரு கப் ஓட்ஸை கலந்து லேசாக பிசையவும். இதை சிறிய உருண்டைகளாக (அ) பிடித்த வடிவத்தில் செய்யவும். மீதி ஓட்ஸை தட்டில் பரப்பவும். அதில் உருட்டிய ஓட்ஸை, புரட்டி எடுக்கவும். இதை 'ஃப்ரையிங் பான்'-ல் 2 (அ) 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வறுத்து எடுக்கவும். தக்காளி (அ) புதினா தொக்குடன் பரிமாறவும். *************************************************************** பிஸ்கெட் தமாக்கா தேவையானவை: ஏதாவது ஒரு பிஸ்கெட் - ஒரு பாக்கெட், பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், கஸ்டர்டு பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், மில்க்மெய்டு - அரை கப், முந்திரித்தூள் - 2 டேபிள்ஸ்பூன், செய்முறை: பாலில் கஸ்டர்டு பவுடரை கரைத்து கொதிக்க விடவும். இது கெட்டியானதும், வெண்ணெய், மில்க்மெய்டு, சர்க்கரை, எசன்ஸ் சேர்க்கவும். பிஸ்கெட்டை பொடித்து, ஒரு டிரேயில் பரப்ப வும். இதன் மேல் கஸ்-டர்டு கலவையை ஊற்றவும். முந்திரித்தூள் தூவி பரிமாறவும். ******************************************************** ஆரஞ்சு பழ சாதம் தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், ஆரஞ்சு பழம் - 4, சர்க்கரை - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல் - ஒரு டீஸ்பூன், கிராம்பு - 3 (நசுக்கவும்), ஏலக்காய்த்தூள்-அரை டீஸ்பூன், பட்டைத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்து, அதை அரிசியுடன் கலந்து சாதமாக செய்யவும். பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் ஆரஞ்சு தோலை போட்டு வதக்கவும். சிறிது வதங்கி யதும் மற்ற பொடிகளை சேர்த்து ஒருமுறை கிளறவும். இதில் ஆரஞ்சு சாதத்தை போட்டு உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறி சூடாக பரிமாறவும். ************************************************************* மாம்பழ சாக்லெட் தேவையானவை: தோல் சீவி பொடியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் - 2 கப், மஞ்சள் கலர் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மில்க்மெய்டு - கால் கப், பால் பவுடர் - 3 டீஸ்பூன், சர்க்கரை - கால் கப். செய்முறை: கடாயில் வெண்ணெயை போட்டு, உருகியதும் மாம்பழ துண்டுகளை போட்டு, 2 நிமிடம் வதக்கவும். பிறகு சர்க்கரை, மில்க்மெய்டு, பால் பவுடர், கலர் சேர்த்து கெட்டியாகக் கிளறி, சிறிது ஆறியதும் சாக்லெட் வடிவத்தில் உருட்டி வைக்கவும். ************************************************************* கஸ்டர்டு - பழ ஜெல்லி புட்டிங் தேவையானவை: பிஸ்கெட் கேக் பொடி (பேக்கரியில் கிடைக்கும்) - 2 கப், சர்க்கரை தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம், ஆப்பிள் துண்டுகள் - ஒரு கப், கஸ்டர்டு பவுடர் (மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 6 டீஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், பால் - 3 கப், ஜெல்லி கிறிஸ்டல்ஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு சிறிய பாக்கெட், தண்ணீர் - 2 கப். செய்முறை: வட்ட வடிவ பாத்திரத்தின் அடியில் பிஸ்கெட் கேக் பொடியை பரப்பவும். இதன் மேல் சர்க்கரை தண்ணீர் தெளித்து லேசாக அழுத்தவும். பாலை கொதிக்க வைத்து அதில் கஸ்டர்டு பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். பால் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக ஆறவிட்டு, பழத்துண்டுகளை சேர்க்கவும். இதை பிஸ்கெட் தூளின் மேல் பரவலாக ஊற்றவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விட்டு அதில் ஜெல்லி கிறிஸ்டல்ஸை கரைய விட்டு, இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். இதை பழ கஸ்டர்டு கலவை மேல் பரவலாக ஊற்றவும். பிரிட்ஜில் வைத்து, நன்றாக 'செட்' ஆனதும் துண்டுகளாக்கி பரிமாறவும். ********************************************************** ஸ்வீட் மேக்ரோனி தேவையானவை: மேக்ரோனி (மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், சர்க்கரைத்தூள், தேங்காய் துருவல் - தலா கால் கப், செர்ரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி - 4 டேபிள்ஸ்பூன், செய்முறை: கொதிக்கும் தண்ணீரில் மேக்ரோனியை 5 நிமிடம் வேக விடவும் (கையால் தொட்டால் அமுங்கும் பதத்தில்). தண்ணீரை வடிய விட்டு, குளிர்ந்த நீரால் அலசி, 10 நிமிடம் ஆற விடவும். நன்றாக ஆறியதும் அதில் சர்க்கரைத்தூள், தேங்காய் துருவல், பழ துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 731006155832832153

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item