இறால் சுக்கா வறுவல்--சமையல் குறிப்பு
இறால் சுக்கா வறுவல் தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது ...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_11.html
இறால் சுக்கா வறுவல்
தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - தேவைக்கேற்ப
செய்முறை
* இறாலை தோல், குடல் நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
* மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து பேஸ்ட் பதத்தில் வைத்துக் கொள்ளவும்.
* இதில் இறாலை புரட்டி எடுக்கவும்.
* வாணலியில் தேவைக்கேற்ப எண்ணை ஊற்றி கொதித்ததும் இறாலைச் சேர்த்து, குறைந்த தீயில் வைத்திருந்து எண்ணையில் புரட்டவும்.
* இறால் நன்றாக வெந்து எண்ணையை கொப்பளிக்கத் தொடங்கியதும் இறக்கிவிடவும்.
இறால் சுக்கா தயார்.
********************************************************************************
Post a Comment