மட்டன் ஸ்டூ தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 கிலோ வெங்காயம் - 200 கிராம் தேங்காய்ப் பால் - 2 கப் கேரட் - 100 கிராம் காலிபிளவர் - 100 கிராம்...

மட்டன் ஸ்டூ
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தேங்காய்ப் பால் - 2 கப்
கேரட் - 100 கிராம்
காலிபிளவர் - 100 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
பட்டை - 2
லவங்கம் - 2
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* மட்டன், காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
* மட்டன், காய்கறிகளைச் சேர்த்து, இடித்த பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
* போதுமான அளவு நீர் ஊற்றி மட்டன், காய்கறிகளை வேக விடவும்.
* கலவை வெந்து சுண்டிய பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும்.
குறிப்பு:
* ஆப்பம், இடியாப்பம், தோசை ஆகியவற்றிற்கு இந்த `ஸ்டூ' தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
Post a Comment