சிக்கன் மசாலா--சமையல் குறிப்பு
சிக்கன் மசாலா தேவையான பொருட்கள் சிக்கன்-1/2 கிலோ (துண்டாக நறுக்கிக் கொள்ளவும்) வெங்காயம்-1/2 கிலோ (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_08.html
சிக்கன் மசாலா
தேவையான பொருட்கள்
சிக்கன்-1/2 கிலோ (துண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
வெங்காயம்-1/2 கிலோ (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) உப்பு-தேவையான அளவு
மஞ்சள் பொடி-1 டீஸ்பூன், தனியாப் பொடி-1 டீஸ்பூன்
மிளகாய்த தூள்-2 டீஸ்பூன், தக்காளி-6
இஞ்சி-1 துண்டு, பூண்டு 6 பல், பச்சை மிளகாய் 2
இவை மூன்றையும் விழுதாக அரைக்கவும்.
தாளிக்க
எண்ணெய்-1/2 கப்
சோம்பு-2 டீஸ்பூன்
பிரிபசி இலை-2
புளிக் கரைசல்-1 எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய்-1/2 மூடி
பட்டை-2
சோம்பு-2 டீஸ்பூன்
இவை மூன்றையும் அரைக்கவும்
செய்முறை
அடுப்பில் கடாயை வைதது, எண்ணெய் விட்டு, சோம்பு, பிரிஞ்சி இலை போட்டுத தாளிக்கவும் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்தது வதக்கவும். பின் மசாலாப் பொடிகள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது எல்லாம் சேர்தது வதக்கவும் பின், தக்காளி சேர்தது தளதளவென்று கொதிவரும் போது சிக்கன் துண்டுகள் போட்டு வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் விட்டு, மெலிதான தீயில்மூடி வைக்கவும். முக்கால்வாசி வெந்தவுடன் புளிக் கரைசலை விட்டு கொதிவந்ததும் தேங்காய் பேஸ்ட்டையும், சோம்பு பேஸ்ட்டையும் சேர்ததுக் கைவிடாமல்கிளறவும். கொதிக்கவிடவும். சிலர் முட்டையை அடிதது ஊற்றிக் கிளறுவார்கள்(விருப்பப்பட்டால்) சேர்க்கலாம்.
2 comments
"தேங்காய் பட்டை,"
கேள்விப்பட்டதேயில்லை. தேங்காயை அரைத்துச் சேர்ப்பதைச்சொல்கிறீர்களா ?
தவறு நீக்கப்பட்டு சரியான வார்த்தை உபயோகிக்கப்பட்டது. நன்றிகள் பல!
Post a Comment