ஆரோக்கியமுடன் வாழ ( 'ஹுமோகுளோபின்' )என்ற இரும்புச் சத்து) விரும்பு.

ஆரோக்கியமுடன் வாழ இரும்பை ( 'ஹுமோகுளோபின்' என்ற இரும்புச் சத்து) விரும்பு. 'இருப்பவன் இரும்பை தின்பான்' சித்த மருத்துவ ப...

ஆரோக்கியமுடன் வாழ இரும்பை ( 'ஹுமோகுளோபின்' என்ற இரும்புச் சத்து) விரும்பு. 'இருப்பவன் இரும்பை தின்பான்' சித்த மருத்துவ பழமொழி. உயிரோடு இருந்து ஆரோக்கியமுடன் வாழ விரும்புகின்றவர்கள் இரும்பை (அ) இரும்புச் சத்தினை நாடுவார்கள் என்பதே இதன் கருத்து. உடலின் அடிப்படையான ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து தேவையாக இருக்கிறது.. ஏனெனில் குருதியில் நம் உயிருக்கு ஆதாரமாகிய பிராண வாயுவை ஏற்றிச் செல்லும் வேலை ரத்த சிவப்பணுக்களுக்கு உரியது. இந்த சிவப்பு அணுக்களின் (RBC) ஜீவனாக விளங்குவது 'ஹுமோகுளோபின்' என்ற இரும்புச் சத்து அடங்கிய சேர்மானமாகும். எனவேதான் உடலின் அடிப்படையான ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து தேவையாக இருக்கிறது. இந்த சத்துக் குறைந்து போனால் முகம், உடல் வெளுத்து, ஜீவகளை குன்றி, சோம்பல், மூட்டு வலி, உடல்வலி, படபடப்பு, மூச்சு வாங்குதல், தலைசுற்றல் என்பன போன்ற பல அறிகுறிகள் தோன்றி நம்மை பாடுபடுத்தக்கூடும். Anaemic Pallor என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த நிலையை வெளுப்பு நோய் என்பர் நம் முன்னோர். சராசரியாக பத்தில் ஆறு பேருக்கு இந்த வெளுப்பு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாயினால் இது பெண்களிடையே அதிய அளவில் ஏற்படுகின்றது. இதற்காக டானிக்குகளையும், மாத்திரைகளையும் வாங்கி விழுங்குவதைவிட உணவு முறை மாற்றம் செய்து கொள்வது நிரந்தர தீர்வை தரும். 1. இரும்புச் சத்தானது பெரும்பான்மை பழங்களிலும், கீரைகளிலும் அசைவ உணவு வகைகளிலும் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இரும்புச் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் B12, Folic acid போன்ற சத்துக்கள் தேவைபடுகின்றன. எனவே, இவைகளும் கிட்டும் வகையில் உணவை அமைத்துக் கொள்ளவேண்டும். 2. அரிசி கோதுமை வகைகளை நன்கு பாலிஷ் செய்து உண்பதை தவிர்த்தல் வேண்டும். இதனால் அரசியில் மீதியிருக்கும் சத்து கிடைக்காமல் போகும். இதற்கு பதிலாக அடிக்கடி கைக்குத்தல் அரிசி, அவல் ஆகியவற்றை கஞ்சி, பாயாசம் போல செய்து பருகலாம். இதனால் இதன் இரும்பு மற்றும் வைட்டமின் சத்து கிடைக்கும். கோதுமை, கேழ்வரகு, கார் அரிசி ஆகியவையும் இதில் சிறந்தன. 3. வாரம் 3 நாட்கள் கண்டிப்பாக கீரைகள் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக முருங்கைக் கீரை, பசளை, வெந்தய கீரைகளில் இரும்புச் சத்து அதிகம். இவைகளை பகலுணவில் கைப்பிடி அளவு சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மேலும் இவற்றின் நார்ச்சத்தினால் மலம் சிக்கலின்றி கழியும். 4. கருவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றிலும் இரும்பு சத்து அதிக அளவில் அடங்கியுள்ளது. எனவே, இவற்றை துவையலாக அரைத்தும், மோரில் கலந்தும் பருகலாம். இதனால் நல்ல செரிமானம் கிட்டும். 5. மாதத்தில் 2 நாட்களாவது காயகல்ப கீரைகளாகிய பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வல்லாரை ஆகியவற்றை உணவில் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். (அ) இந்தக் கீரைகளை மண்தொட்டிகளில் வளர்த்து தினமும் 1-2 இலையை காலை வெறும் வயிற்றில் உண்டுவரலாம். 6. பழவகைகளில் மாதுளை, திராட்சை, சப்போட்டா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், விளாம்பழம் ஆகியவற்றில் இரும்புச் சத்தும், பல்வேறு வைட்டமின்களும் உள்ளன. எனவே, மாலை நேரங்களில் ஏதேனும் ஒரு பழத்தை உண்ணலாம். பழங்களை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. 7. உலர்ந்த பழவகைகளான சீமை அத்திப்பழம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, கர்ஜுர்க்காய் ஆகியவற்றிலும், உலர்ந்த கொட்டைகளாகிய முந்திரி, பாதாம், அக்ரோட்டு ஆகியவற்றில் இரும்புச் சத்துடன் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவைகளை இரவு தூங்கச் செல்லும் முன் உண்ணலாம். 8. அசைவ உணவுகளில் இரும்புச் சத்து அதிகமாக அடங்கியுள்ளது. குறிப்பாக ஆட்டு ஈரல், எலும்பு மஜ்ஜை மிகவும் சிறந்தன. வெள்ளாட்டின் நெஞ்செலும்பை 'சூப்' போல செய்து பருகினால் நோயினால் மெலிந்த உடலும் கூட தேறிவிடும். தவிர ஆட்டுக்கால், மாமிசம், மீன் ஆகியவற்றை அவரவர் தேக நிலை, வயது, காலத்திற்கேற்ப உண்டு வர 'சோகை நோய்' ஏற்படாது. ஆங்கிலத்தில் சொல்வது போல எப்போதும் 'in the pink of health'இல் இருக்கலாம்..

Related

சைனஸ் - ஆஸ்துமா... குணப்படுத்தும் முசுமுசுக்கை!

சைனஸ் - ஆஸ்துமா... குணப்படுத்தும் முசுமுசுக்கை! மருத்துவம் முசுமுசுக்கை, கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. மூச்சுக் குழல், நுரையீரல் மற்றும் அதை ஒட்டி உள்ள எல்லாப் ப...

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? உலகில் உயிர்கள் வாழ மிக அவசியமானது உணவு.  அது, அறுசுவையும் கலந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் நம் உடலுக்கும்...

எளிய 30 வழிகள் நமக்கு நாமே நலம் காப்போம்!

நமக்கு நாமே நலம் காப்போம்! எளிய 30 வழிகள் ஆரோக்கியம் என்பது சிவந்த நிறத்திலோ, கட்டுடலிலோ இல்லை. சில ஆரோக்கியமான பழக்கவழங்கங்களைத் தவறாமல் கடைப்பிடித்தாலே போத...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 3:24:34 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,327

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item