ஹோமியோபதி மருத்துவம்--4

தீவிர தீட்டு வலி செந்தமிழ், நெய்வேலி. என் வயது முப்பது. எனக்கு இத்தனை வருடங்களாக மாதவிடாய் சுழற்சியில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால், ...

தீவிர தீட்டு வலி செந்தமிழ், நெய்வேலி. என் வயது முப்பது. எனக்கு இத்தனை வருடங்களாக மாதவிடாய் சுழற்சியில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால், பல்வேறு மருந்துகளைச் சாப்பிட்டும் இந்தத் தீட்டு வருகிற மூன்று நாட்களுக்கு, என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. தீராத பெரும் தீவிரப் பிரசினையாக இது உருமாறிக்கொண்டிருக்கிறது. தாங்க/தூங்க முடியவில்லை. மாதம் ஒருமுறை செத்துப்பிழைக்கிறேன். மறுபிறவி எடுக்கிறேன். வலி என்னைக் கொல்கிறது உயிருடன். ஹார்மோன் பிரசினை / குடும்ப பாங்கு என்று பல்வேறு காரணங்கள். எனக்கான மருந்துகளை எழுதுங்கள். அடுத்த மாதமாவது நான் வலிகளிலிருந்து விடுபடுகின்றேனா என்று பார்ப்போம். தீராத தீவிரவாதப் பிரசினையா இது? இதனை மருந்துகளால் தீர்க்கமுடியும். தாங்கள் Belladunna 200, Graphites 30, ஆகிய இரண்டு மருந்துகளை Two Drachim Pills அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை, ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிடுங்கள். இதனை PMS/PMT என்பார்கள். நோயின் பெயர்கள் மாறினாலும் மருந்துகள் என்னவோ ஒன்றுதான். இதற்கான காரணங்கள் பற்றித் தாங்கள் கவலைப்படத் தேவையில்லை. --------------------------------------------------------------------------------------------- எல்லாமே எமன் ராபின்சன், ஏரல். எனக்கு HIVPositive ஆக இருப்பது இரண்டுமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. மனதைத் தேற்றிக்கொள்ள முடியவில்லை. தவறுக்குத் தவறாமல் இயற்கை அளித்த தண்டனை என்று தயங்கித் தயங்கி தள்ளாட்டத்தில் இருக்கிறேன். எனக்கு சாதாரணமாக சளி பிடித்தாலோ அல்லது வயிற்றுப்போக்கு இருந்தாலோ பல நாட்கள் / மாதக்கணக்கில் கூட குணமாக நேரம் எடுத்துக்கொள்கிறது. பால்வினை நிபுணர், இதெல்லாமே எய்ட்ஸின் ஏடாகூட விளைவுகள் என்றும், மாத்திரைகளால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது என்றும் சொல்கிறார். எனக்கு காசநோய் இல்லை. எய்ட்ஸ§ம், காசமும் கைகோர்த்த நண்பர்கள் என்று படித்திருக்கிறேன். என் மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் இணைத்துள்ளேன். தங்களின் தொல்லைகள் எல்லாமே எய்ட்ஸ் என்கின்ற எமனின் விளையாட்டுக்கள். இதனை விதியின் சதி என்றுதான், சளைக்காமல் வருந்துவார்கள், எமனிடம் அகப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள். எய்ட்ஸ§க்கு ஒன்றும் இனி, உங்கள் விஷயத்தில் செய்ய முடியாவிட்டாலும், சில தொந்தரவுகளை, தாங்கள் எழுதியிருக்கும் வயிறு, சுவாசப் பிரசினைகளைச் சரிப்படுத்தமுடியும். ALLIUM SAT, OCIMUMCAN, RHUSTOX, PODOPHYLCUM, MERC.COR போன்ற மருந்துகள், மிகவும் முக்கியமானவை. முறையான ஆலோசனையின் பேரில் சாப்பிடுங்கள். --------------------------------------------------------------------------------------- உதவாத உறுப்புகள் உபயா, கிருஷ்ணகிரி. எனக்கு முதலில் கொலஸ்ட்ரால் பிரசிசனையும், இரத்தக் கொதிப்பும் இருந்தது. பிறகு சர்க்கரை வேறு சேர்ந்துகொண்டது. சர்க்கரையின் பக்க/பின் விளைவுகள் என்னைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சர்க்கரையால் நான் சரீர பலத்தை இழந்து, ஒன்றையும் சாதிக்க முடியாதவனாகி, மாதாமாதம் சர்க்கரையை மட்டும் தான் சோதிக்கிறேன். இப்படி ஒரு துரதிர்ஷ்டம் எனக்கு. சிறுநீரகப் பிரசினைகள். கண் மங்கல்கள் / கலங்கல்கள் எல்லாம் பிரசினையின் கிளைகள் என்று சொல்லி, மருத்துவர் மருந்துகளை அதிகப்படுத்திக்கொண்டே போகிறார். என் பிரசினைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாதது போலவே உணருகிறேன். எனக்கு என்ன ஆலோசனை? சர்க்கரை, அது அழிக்கிற உறுப்புகளின் உறுத்தல்களில் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறீர்கள் போலும். சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றும், ஒன்று சேர்ந்து தொல்லை கொடுக்கும் கூட்டாளிகள். இவற்றை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறுவது சுலபமல்ல. ஆனால் முயன்றால் முடியாததும் அல்ல. தாங்கள் Lactic Acid 200, capsicum 200 ஆகிய இரண்டு மருந்துகளை Two Drachm Pills அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் 5 மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, இரவு என்று இரண்டு வேளைக்கு உணவிற்கு முன்னர் பதினைந்து நாட்கள் சாப்பிடுங்கள். உறுப்புகள் இனி உதவும். ------------------------------------------------------------------------------------------ முழுசாக முடியவில்லை... பரசுராமன், தஞ்சை. என் வயது இருபத்தொன்பது. திருமணமாகி இரண்டு மாதங்கள் இன்றோடு முடிகிறது. எனக்குச் சின்ன வயதில் சின்ன, சின்ன ஆசையாய் நீண்ட நேர சுயஇன்பப் பழக்கம் உண்டு. உறுப்பில் உறுதியில்லை என்று துவளும்போது, மனதிலும் நான் துவண்டு போகிறேன். என்னால் முழுமையாகத் திருப்திபடுத்த முடியவில்லை. என் துணைவியாருக்கும் இதில் பெரிய மனக்குறைதான். கால ஓட்டத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஏதோ என்று போய்விட முடியவில்லை. முடியாமை என்பது முடிவான ஒன்றாக எனக்கு ஆகிவிட்டதோ என்று மூளையைக் குடைகிறேன். மூலையில் உட்கார்ந்து முற்றத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்ன தலைவிதியோ? எப்பிறவியில் நான் செய்த பாவமோ? முழுசாகத்தான் முடியவில்லையே தவிர, தங்களின் முழு முயற்சியும் பலனளிக்காமல் போகவில்லையே? இதில் முனகல்கள் எதற்கு? சில நேரங்களில் ஒரு வித தாழ்வு மனப்பான்மை காரணமாக, சிலருக்கு இப்படி நேர்ந்து விடுவதுண்டு. தங்களிடம் முழு மனப்பகுப்பாய்வு செய்து, மனதை மாற்ற / தேற்ற வேண்டும். இதற்குத் தாங்கள் ஹோமியோபதி நிபுணரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். இல்லாமை, இயலாமை, முடியாமை, முயலாமை போன்ற பிரசினைகளுக்குத்தான் முடிவாக, முடித்துவைக்கும் மருந்துகள் ஹோமியோபதியில் இருக்கின்றனவே! கால ஓட்டம் தங்கள் எண்ணங்களை ஏணியின் உச்சில் ஏற்றும். ------------------------------------------------------------------------------------ வலிகளின் வகைகள் பத்மினி, காங்கேயம். எனக்கு உடம்பு முழுவதும் மிகக் கடுமையான தாங்கமுடியாத கொடுமையான வலிகள். வலிகள் ஒவ்வொன்றும் ஒரு விதத் தன்மையில் என்னை வதைத்து எடுக்கின்றன. குறிப்பிட்டு உடலில் எங்கு வலிக்கிறது என்று சொல்லமுடியவில்லை. பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்த மருத்துவர் மூட்டு, எலும்புகளில் ஒரு பிரசினையும் இல்லை. பொதுவாக, சத்துக்குறைவால் வரும் வலிகள்தான் என்று GENERALISED MYALGIA என்கிறார். வலி வரும் வழியும் எனக்குத் தெரியவில்லை. வகைகளையும் வரிசைப்படுத்த முடியவில்லை. ஆனால் வசமாக, வலிகளில் மாட்டிக்கொண்டதை மட்டும் உணருகிறேன். என் மருத்துவக் குறிப்புகளைப் பார்த்து எனக்கான வழிகளைச் சொல்லுங்கள். ரிப்போர்ட்டுகளில் ஒரு பிரசினையும் இல்லை. இதனால் வகை, வகையான வலிகள் போகும் வழியை உங்களுக்கு நான் வகைப்படுத்தமுடியும். வலிகளுக்கு வடிகாலாய் தாங்கள் EUPATORIUM IM, CHAMOMILLA IM ஆகிய இரண்டு ஹோமியோபதி, மருந்துகளை Two Drachm Pills அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை உணவிற்கு முன்பு ஒரு மாதம் சாப்பிடுங்கள். மேற்கொண்டும் பல்வேறு பயோ கெமிக்கல் மருந்துகளும், தாய் திரவங்களும் தங்களைத் திடப்படுத்தும். --------------------------------------------------------------------------------- வெடிப்பால் துடிப்பு கலா, காஞ்சிபுரம். எனக்கு இரண்டு கால்களிலுமே, காலை கீழே வைக்கமுடியாத அளவிற்கு இரண்டறக் கலந்திருக்கின்றன வெடிப்புகள். பாதத்தைச் சிறிது அழுத்தினாலும் கதறுகின்ற அளவிற்கு துடிப்புகள். இதற்கு தோல்நோய் நிபுணரிடம் பல்வேறு மருந்துகளை மாற்றி, மாற்றி சாப்பிட்டபோதும் பலனில்லை . ஒரு கட்டத்தில் ‘ஸ்டீராய்டு’ சிகிச்சை ஆரம்பிப்பதாகச் சொன்னார். அதன் பக்க விளைவுகள் பாதத்தை மட்டுமின்றி, மற்றவற்றையும் பாதகமாக்கும் என்பதால் பரிதவித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவித ஒவ்வாமை / மரபணுக்கோளாறு என்று சொல்கிறார். காரணத்தைச் சொல்லி நான் கேட்டு என்ன செய்ய, ‘எனக்கு காரியம் முடியவேண்டும். களிம்புகள் போட்டு’ களைத்துப்போனேன். கால் கவலையை மாற்றமுடியுமா? வெடிப்பில் துடிதுடித்துப் போகிறீர்கள். களிம்புகள் வேண்டாம். கவலையை மறக்க, கால்களைக் காப்பாற்ற Graphites 200, ACID NIT 200 ஆகிய இரண்டு ஹோமியோபதி மருந்துகளை Two Drachm Pills அளவில் வாங்கி ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் இரண்டு வாரங்கள் சுவைத்துச் சாப்பிடுங்கள். மேற்கொண்டும் தாங்கள் மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்பதால் ஹோமியோபதி நிபுணரை அணுகவும். ---------------------------------------------------------------------------------- இரத்தம் இல்லையே! மீனாட்சி, அரும்பாக்கம். என் வயது முப்பத்தெட்டு. மூன்று குழந்தைகள். நார்மல் டெலிவரி. எனக்கு உடம்பில் பல்வேறு கோளாறுகள். மருத்துவர் பார்த்தவுடனேயே இரத்தசோகை இருக்கின்றது என்றும், இதனால்தான் பல பிரசினைகள் உள்ளுக்குள் இருந்து உயிரை வாட்டுகின்றன என்றும் சொல்கிறார். எனக்கு பிதீ Hb 7 gms%தான் இருக்கிறது. மருந்து, மாத்திரைகளால் இரத்த சோகை சரியாகவில்லை. BONE MARROW BIOPSY மற்றும் பலவித சோதனைகளைச் செய்து பார்த்து, Iron deficiency என்று சொல்லி, இரத்தம் இரண்டு யூனிட்டுகள் ஏற்றினார். சில மாதங்களிலேயே குறைந்துவிட்டது. நிலைமை மோசமாகிக்கொண்டே வருகிறது. உணவே மருந்து என்று என்னிடம் இறுதியாகச் சொல்லி, இதற்கு மேல் சிகிச்சை இல்லை என்று மறுத்துவிட்டார். என் மருத்துவக் குறிப்புகளைப் பார்த்து பதில் எழுதுங்கள். இரத்தம் இல்லையே; இரத்த சோகை இருக்கிறதே என்று சுய இரக்கம் கொள்கிறீர்கள். உணவு முறைகளில் கவனம் தேவை. உணவும் உதவாவிட்டால் அங்குதான் உதவுகின்றன ஹோமியோபதி மருந்துகள். . F.P.6X/25GRAMS; N.P.6X/25 GRAMS வாங்கி ஒவ்வொன்றிலும் 5 மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், மாலை, இரவு என்று நான்கு வேளைக்கு உணவிற்கு முன்னர் தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிடுங்கள். எழுதுங்கள். --------------------------------------------------------------------------------------------- விளையாடும் வியாதிகள் யோகேஸ்வரி, புவனகிரி. எனக்குக் கட்டுப்படாத சர்க்கரை, பல வருடங்களாகவே இருந்துகொண்டு இருக்கிறது. கட்டுப்படுத்தி சோர்ந்து போனேன். என்னால் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சர்க்கரைதான் என்னை பல்வேறு விஷயங்களில் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. சரியாகாத சங்கடங்களை யார்தான் சரிப்படுத்துவது? சர்க்கரையின் மேல் அக்கறையாகப் பல்வேறு வியாதிகள் என்னை ஏளனம் செய்கின்றன. எல்லாவற்றையும் நான் மட்டுமே எப்படிச் சமாளிப்பது என்கின்ற பெருங்கவலையால், இன்னும் சர்க்கரை கூடிப்போகிறது. மூட்டுவலி, நரம்புத்தளர்ச்சி, கண்பார்வை மங்குதல் சதைப்பிடிப்பு, உடற்சோர்வு என்று விளையாடிவிட்டன வித்தியாசமான, விசித்திர வியாதிகள் என் உடம்பில். என் மருத்துவக் குறிப்புகளை இணைத்துள்ளேன். சர்க்கரைக் கட்டுக்கடங்காமல் இருக்கும்போது, Opportunistic Infection என்று சொல்லப்படுகின்ற சந்தர்ப்பவாத சங்கடத் தொற்றுநோய்கள், தொற்றிக்கொள்ளும். ஆளைக் கொல்லும். சர்க்கரையின் மேல், எல்லா உறுப்புகளின் வியாதிகளும் சரிசமமாக விளையாடிவிட்டன என்ற பெருங்கவலை உங்களுக்கு. உங்கள் விளையாட்டு வியாதிகளுக்கு விடை கொடுக்க INULA, ARNICA FRAXINUS AMER, OOPHORINUM போன்ற மருந்துகள் உள்ளன. -------------------------------------------------------------------------------------- குடலுக்கு குணமுண்டு மகேஷ், நெல்லை. எனக்கு குடற்புண் தொடர்ந்து ஆறு வருடங்களாகவே ஆறாமல் இருந்துகொண்டு இருக்கிறது. எண்டோஸ்கோப்பியில் ஆரம்பித்தது, என்றைக்கும் / இன்றைக்கும் மருந்துகளைச் சாப்பிடும் நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டுவிட்டது. மருத்துவரும் வேறு வழியில்லை என்று என் வயிற்றில் அடிக்கிறார். எரிகிறது நெஞ்சும், வயிறும், வாயும், நோயும். எதைச் சொல்லி எதனை எழுத்தில் விடுவது என்று தெரியாமல் தவிக்கிறேன். என் மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். இதனை இப்படியே விட்டுவிட்டால் குடலில் கேன்சர் வரும் என்று சொல்கிறார்களே? குடலால் குலுங்கிப்போயுள்ளீர்கள் மனதளவில். இதில் கேன்சர் பயம் வேறு. குடலை நன்கு குணப்படுத்தும் மருந்துகள் உண்டு ஹோமியோபதியில். தாங்கள் CARBOVEG 200, IRIS VER 30 ஆகிய இரண்டு மருந்துகளை TWO DRACHM PILLS அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, இரவு என்று இரண்டு வேளைக்கு உணவிற்கு முன்னர் பதினைந்து நாட்கள் சாப்பிட்ட பிறகு எனக்கு எழுதுங்கள். புற்றுநோயாக இது முற்றாது. வீண் கவலை, உங்களின் விருப்ப வேலைகளைக் கெடுக்கும்.

Related

ஹோமியோபதி மருத்துவம் 5864259598062068590

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item