தேங்காய்ப்பூ சோமாஸ்--சமையல் குறிப்பு

தேங்காய்ப்பூ சோமாஸ் தேவையான பொருட்கள்: தேங்காய்ப்பூ - 500 மில்லி பசு நெய் ‍ - 50 மில்லி ரோஜா பன்னீர் - 2 ஸ்பூன் சீனி - 100 கிராம் பொட்டுக...

தேங்காய்ப்பூ சோமாஸ்
தேவையான பொருட்கள்: தேங்காய்ப்பூ - 500 மில்லி பசு நெய் ‍ - 50 மில்லி ரோஜா பன்னீர் - 2 ஸ்பூன் சீனி - 100 கிராம் பொட்டுக் கடலை - 1 பிடி கிஸ்மிஸ் - 1 பிடி முந்திரிப் பருப்பு - 1 பிடி கசகசா - 2 ஸ்பூன் கறுப்பு எள் - 2 ஸ்பூன் ஏலப்பொடி - 1 ஸ்பூன் உப்பு - 3/4 ஸ்பூன் உள்ளடம் (பூரணம்) செய்முறை: 1-3. ஒரு வாணலியில் பசுநெய் விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொண்டு, கிஸ்மிஸை வறுக்கவும். அதே நெய்யில் கசகசா மற்றும் கறுப்பு எள்ளை வாசம் வரும்வரை (தீயாமல்) வறுக்கவும். 4. பொட்டுக் கடலையை வறுப்பதாக இருந்தால், கசகசா & கறுப்பு எள்ளை வறுப்பதற்கு முன்பே வறுத்து எடுத்துக் கொள்ளவும். (வறுக்காமலும் சேர்க்கலாம்.) 1. அதே வாணலியில் தேங்காய்ப்பூவை 3 ஸ்பூன் நெய்விட்டு அடுப்பை நிதானமாக‌ வைத்து கைவிடாமல் தொடர்ந்து வறுக்கவும். 2. கோல்டன் கலரில் வந்தவுடன் உப்பு, ஏலப்பொடி சேர்த்து பிரட்டி வேறு பாத்திரத்தில் உடனே மாற்றவும். (பாத்திரத்தை மாற்றாமல் வைத்திருந்தால் அடிப்பக்கத்தில் உள்ள தேங்காய்ப்பூ அந்த சூட்டில் கருகிவிடும்.) 1. பிறகு அந்த‌ வாணலியை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தமாக துடைத்துவிட்டு சீனியும், அதில் பாதியளவு தண்ணீரும் சேர்த்து, ரோஜா பன்னீர் சேர்க்கவும். 2. சீனி நன்கு கரைந்து பாகு கொதிக்கும்போது வறுத்து வைத்துள்ள தேங்காய்ப் பூவைக் கொட்டி, பூ முழுவதும் பாகு படும்படி பிரட்டி அடுப்பை அணைக்கவும். 3. ஏற்கனவே நெய்யில் வறுத்து வைத்துள்ள பொருட்களை இதனுடன் சேர்த்து கலந்து வைக்கவும். 1. இப்போது இந்த உள்ளடத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு மரக் கரண்டியால் நன்கு அழுத்தவும். 2. ஆறி, இறுகும்வரை க்ளியர் ராப் பேப்பர் போட்டு மூடி வைக்கவும். (இந்த உள்ளடத்தை முந்திய நாள்கூட செய்து வைக்கலாம்.) மாவு தயார் பண்ணி மடிக்கும் முறை: 1. தேவையான பொருட்கள்: மைதா - 600 மில்லி தண்ணீர் - 150 மில்லிக்கு சற்று கூடுதலாக‌ சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 100 மில்லி சீனி - 1 ஸ்பூன் உப்பு - தேவைக்கு 2. கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பூரிமாவுபோல் பிசைந்து, எலுமிச்சை அளவுக்கு சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 3. சப்பாத்திக் கட்டையில் சிறிது மைதாவைத் தூவிக்கொண்டு, சற்று மெல்லியதாக தேய்க்கவும். 4. சோமாஸ் அச்சு அல்லது வட்டமான ஒரு பொருளைக் கொண்டு வெட்டி எடுக்கவும். 1. தேய்த்து, வெட்டிய‌ மாவில் ஒட்டியிருக்கும் மைதாவினை தட்டிவிட்டு வைக்கவும். (மாவு அதிகமாக ஒட்டியிருந்தால் எண்ணெயில் இறங்கி, எண்ணெய் சீக்கிரமாக கறுத்துவிடும்.) 2. இப்போது தண்ணீரில் மைதாவினை சிறிது குழைத்து, வெட்டி எடுத்த மாவினை சோமாஸ் அச்சில் வைத்து, ஒரு பக்கமாக உள்ளடத்தை வைத்து, குழைத்த மைதா பேஸ்ட்டை ஓரங்களில் தடவவும். 3. மெதுவாக அச்சினை மூடி ஓரங்கள் நன்கு ஒட்டும்படி அழுத்தி எடுக்கவும். பிரியாதபடி மீண்டும் ஒருமுறை விரல்களால் அழுத்தவும். 4. சோமாஸ் அச்சு இல்லாவிட்டால் வட்டமாக வெட்டி, உள்ளடம் வைத்த‌ பிறகு கையினாலேயே இதுபோல் மடிக்கலாம். அப்படி மடிக்கும்போது விரல்களால் ஓரங்களை வரிசையாக கிள்ளிவிடவும். (4 வது எண் படத்தில் உள்ளது, அச்சு இல்லாமல் கைகளால் மடித்து, கிள்ளியது.) 1. ஓரங்களை சரியாக ஒட்டியவுடன், சூடான எண்ணெயில் போட்டு அதன் மேல் எண்ணெயை ஜாரணியால் மெதுவாக அள்ளி, அள்ளி விடவும். அப்போதுதான் நன்கு உப்பி பொரியும். 2. போதுமான அளவு பொரிந்தவுடன் எடுக்கவும். 3. வலைத்தட்டில் வைத்து எண்ணெயை நன்கு வடியவிடவும். சுவையான தேங்காய்ப்பூ சோமாஸ் ரெடி! குறிப்பு: வெளியில் ஆறியதுபோல் இருக்கும், ஆனால் உள்ளே உள்ள சூடு சீக்கிரம் குறையாது. சூடாக‌ மூடினால் மறுநாளே நமத்துவிடும். அதனால் நன்கு ஆறும்வரை (சுமார் 4,5 மணி நேரங்கள்) திறந்தே வைக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் இறுக மூடி வைத்தால் 1 வாரமாக இருந்தாலும் நமத்துப் போகாமல் இருக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 3381367213492223977

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item