ஹோம் லோன் வாங்க... ஹோம் லோன் வாங்கப் போறீங்களா..? அதுக்கு முன்னால கொஞ்சம் ஹோம் வொர்க் செய்யலாமா...? 2. இன்னொரு முக்கியமான விஷயம்... உங்க...

ஹோம் லோன் வாங்க...
ஹோம் லோன் வாங்கப் போறீங்களா..? அதுக்கு முன்னால கொஞ்சம் ஹோம் வொர்க் செய்யலாமா...?
2. இன்னொரு முக்கியமான விஷயம்... உங்களுக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் மிகவும் அவசியம்.
3. ஏதேனும் ஒரு பேங்குல அக்கவுண்ட் வைச்சிருக்கணுமே... பாஸ்புக் கைவசம் இருக்கா..? இது ரொம்ப முக்கியம்ங்க.
4. வங்கி மேலாளரை அணுகும்போது இருப்பிடச் சான்றிதழ், ரேஷன் கார்டுன்னு எதையாச்சும் காண்பிச்சே ஆகணும். வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறதா..? அதையும் மறக்காம கொண்டு போங்க. மாத வருமானம் பெறுவதற்கான சாலரி ஸ்லிப் இருந்தால் உத்தமம்.
5. விவசாயம் செய்யறது. விசைத் தறி ஓட்டறதுன்னு ஏதோ பொழப்பு ஓடிட்டிருக்கு. இதுல நிலையான மாத வருமானத்தை நினைச்சுக் கூட பார்க்க முடியாதே...? உங்களின் கவலை நியாயமானது தான். ஆனா, அதுக்கும் வழி இருக்கே... ஏதேனும் ஒரு வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் தொடர்ந்து சேமிப்பவராக இருந்தால் அதையே நிலையான வருமானமாக காட்ட முடியும்.
6. ஃபாரின் வங்கி, தனியார் வங்கி, தேசிய வங்கின்னு இப்படி ஏகப்பட்ட வங்கிகள்... என்னங்க தலை சுத்துதா..? தடுமாறாம யோசிங்க. எந்த பேங்குல வட்டி விகிதம் குறைவு? தவணை முறை சுலபமாக இருக்கிறதா...? இதையெல்லாம் கொஞ்சம் நிதானமாத்தான் அலசணும்.
7. சில குறிப்பிட்ட வங்கிகள்ல 10 வருடங்களுக்கு தாராளமாக காலக் கெடு கொடுப்பாங்க. ஆனா, திடீர்ன்னு அதை 8 வருஷமா குறைச்சு நீங்கள் வாங்கின வீட்டுக் கடன் தொகையை உடனே திருப்பிச் செலுத்துவது நல்லது என்ற பகீர் அறிவிப்பு உங்கள் வீடு தேடி வரலாம். உஷாரா கலந்தாலோசியுங்க.
8. ஒவ்வொரு பேங்குலயும் இவ்வளவு நாளைக்குள் பணம் கட்டலாம்ன்னு ஒரு லிமிட் இருக்கு. ஐந்து வருடங்களில் ஆரம்பித்து, பதினைந்து, இருபது வருடங்கள் வரை காலக்கெடுவை நீட்டிப்பார்கள். இதுவும் கூட உங்கள் சாய்ஸ்தான்.
9. காலி நிலத்துல வீடு கட்டப் போறீங்களா...? அது உங்களோட சொந்த நிலம்தான் என்பதற்குரிய அத்தனை அத்தாட்சிகளும் வேண்டும். கார்ப்பரேஷன் அனுமதி, கிராமமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முறையான சான்றுன்னு இதையெல்லாம் வாங்கி வைச்சுக்கோங்க. நீங்க வீடு கட்டப்போகிற இடமானது விளைச்சல் நிலமாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமானதாகவோ இருக்கக் கூடாதில்லையா..? அதனால, நிலத்திற்குரிய பத்திரங்கள். வில்லங்கச் சான்றிதழ்கள் கட்டாயம் கவனிக்கப்படும்.
10. உடனே கடன் கிடைச்சுடுமா....? அதான் நடக்காது. வங்கியின் சார்பில் ஒரு வழக்கறிஞர் வருவார். எல்லா சான்றிதழ் சமாச்சாரங்களையும் அலசிவிட்டு வில்லங்கம் ஏதுமில்லை என்று அவர் விளக்கம் கொடுத்தால்தான் மேற்படி வேலைகள் நடக்கவே ஆரம்பிக்கும்.
11. தொகையை நீங்களே நிர்ணயித்தால் போதுமா..? போதாது. வங்கியின் சார்பில் ஒரு இன்ஜினீயரை அனுப்புவார்கள். அவர் வந்து பார்வையிட்டு இடத்தின் அளவு, மதிப்பு விவகாரங்களை ரிப்போர்ட் செய்யும் பட்சத்தில் உங்களின் கடன் தொகையை, சம்பந்தப்பட்ட வங்கி பரிசிலிக்கும்.
12. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் ஏதேனும் ஒரு ஃப்ளாட்டை வாங்குவதானாலும் இதே விதிமுறைகள்தான். ஃப்ளாட்டின் சதுர அடி, அது அமைந்திருக்கும் இடம். தற்போதைய விலை மதிப்பு, முறையான அனுமதி என அத்தனையும் பரிசோதிக்கப்படும்.
14. மதிப்பீடுகளெல்லாம் முடிந்து, இவ்வளவு தொகையை இவருக்கு கடனாக அளிக்கலாம் என ஒரு முடிவுக்கு வந்துவிட்டாலும் முழுத்தொகையையும் வங்கிகள் கொடுப்பதில்லை. மொத்த மதிப்பில் 80 சதவீதத் தொகை மட்டுமே உங்களின் கைக்கு வந்து சேரும், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
15. எனக்குன்னு சொந்தமா நிலமும் இல்லை... வீடும் கிடையாது வாடகை வீட்டுலதான் வாழ்ந்திட்டிருக்கேன்... அடடா எதுக்குங்க இந்தப் புலம்பல்..? உங்களுக்கும் வங்கிக் கடன் பெற வழி இருக்கே. முறையான, அரசு அனுமதிபெற்ற காலி நிலத்தை விலைக்கு வாங்க தாராளமாக கடன் தரப்படுகிறது. அப்படியே அதில் ஒரு வீடும் கட்டிக்கொள்ளலாம்.
நம்முடைய மாத வரும்படி என்ன...? குடும்பச் செலவு, ஏற்கெனவே வாங்கிக் குவித்திருக்கும் கடன், வேறுவகையில் பணம் கட்ட வழி இருக்கிறதா...? நம்மைத் தவிர நம் உறவில் மகன்களோ, மனைவியோ நல்ல ஊதியத்தில் வேலை பார்க்கின்றனரா...? இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்குள் நீங்களே பலமுறை கேட்டுக் கொள்ளுங்கள். பதில்கள் சரியாக வருகிறதா...? இப்போது சுமக்க ஆரம்பியுங்கள்... உங்களின் கடன் சுமையை....
Post a Comment