ரவா பௌச் தேவையானவை: மேல் மாவுக்கு: ரவா - அரை கப், மைதா - அரை கப், ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அள...

ரவா பௌச்
தேவையானவை:
மேல் மாவுக்கு: ரவா - அரை கப், மைதா - அரை கப், ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு:
கொண்டக்கடலை - அரை கப், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மேல் மாவுக்கு கொடுத் துள்ளவற்றை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பாத்திரத்தில் மூடி வைத்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் நன்கு பிசைந்து மூடி வைக்கவும். ஊற வைத்த கொண்டக்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும், கரம்மசாலா தூள், எலுமிச்சை சாறு, பச்சைமிளகாய், மல்லித்தழை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மைதாமாவிலிருந்து சிறிது எடுத்து பெரிய பூரியாக இட்டு, நடுவில் சென்னா பூரணத்தை வைத்து விருப்பத்துக்கேற்ப மடித்து எண்ணெயில் பொரித்து பரிமாறவும்.
குறிப்பு: எண்ணெயில் பொரிக்க விருப்பமில்லாதவர்கள் ஆவியில் வேக வைத்து சூடாக இருக்கும்போதே சாப்பிட வேண்டும்.
Post a Comment