இறால் சுரைக்காய் மசாலா தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சுரைக்காய் - 1/2 கிலோ வெங்காயம், தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 4 தனியாத்...

இறால் சுரைக்காய் மசாலா
தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
சுரைக்காய் - 1/2 கிலோ
வெங்காயம், தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
புளி - கோலியளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
கடுகு - 1 டீஸ்பூன்
செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். சுரைக்காயை நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு வெங்காயம், தக்காளி, தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
* மஞ்சள் தூள் சேர்த்து, நறுக்கிய சுரைக்காய் சேர்த்து நீர் ஊற்றி வேக வைக்கவும்,
* இறாலையும், தேவையான அளவு உப்பு, தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி மசாலா திக்கான பதத்தில் வந்ததும் இறக்கி விடவும்.
* சுவைக்க சுவை மிகுந்த சுரைக்காய் இறால் மசாலா தயார்.
Post a Comment