சமையல் குறிப்புகள்! அடடே, இது ராஜஸ்தான் அல்வா!
அடடே, இது ராஜஸ்தான் அல்வா! கோதுமை மாவு அல்வா தேவையானவை: கோதுமை மாவு - 1 கப், நெய் - கால் கப், சர்க்கரை - அரை கப், மிளகு - 1 டீஸ்பூன், பாத...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_19.html
அடடே, இது ராஜஸ்தான் அல்வா!
கோதுமை மாவு அல்வா
தேவையானவை: கோதுமை மாவு - 1 கப், நெய் - கால் கப், சர்க்கரை - அரை கப், மிளகு - 1 டீஸ்பூன், பாதாம் - 3, முந்திரி - 5, ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பாதாம், முந்திரியை மெல்லியதாகச் சீவிக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, பிறகு கோதுமை மாவைச் சேர்த்து, சிறிய தீயில், நிறம் மாறி, வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். மற்றொரு அடுப்பில் சர்க்கரையை அரை கப் தண்ணீரில் சேர்த்து, சர்க்கரைக் கரையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு, இந்த சர்க்கரைக் கரைசலை வறுபட்ட மாவில் சேர்த்து, தீயைக் கூட்டி, நன்கு கிளறிவிடுங்கள். அடுத்து, சீவிய பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறி இறக்குங்கள்.
அல்வாவை சுவைத்துப் பாருங்கள், சொக்கிப் போவீர்கள்!
Post a Comment