வாழைத்தண்டு தயிர் அவல் தேவையானவை: இளம் வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) & 1 கப், அவல் & 2 கப், தேங்காய்ப் பால் தயிர் (அ) சாதாரணத் ...

வாழைத்தண்டு தயிர் அவல்
தேவையானவை: இளம் வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) & 1 கப், அவல் & 2 கப், தேங்காய்ப் பால் தயிர் (அ) சாதாரணத் தயிர் & 2 கப், மிளகாய் விழுது & 2 டீஸ்பூன், இஞ்சி சாறு & 3 டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, கொத்துமல்லி தழை (பொடியாக நறுக்கியது) & 2 டீஸ்பூன், கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) & 2 டீஸ்பூன்.
செய்முறை: உப்புத் தண்ணீரில் கால் மணி நேரம் வாழைத்தண்டை ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஊறவைத்த அவலையும் கலக்கவும். பின்பு, மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் வாழைத் தண்டு மற்றும் அவல் கலவைகளுடன் நன்றாகப் பிசைந்து வைத்தால் சுவையாக இருக்கும்.
கூடுதல் சிறப்பு: சிறுநீர் பாதையில் கற்கள் அடைத்திருந்தால், அதைக் கரைக்க இந்த உணவு ஒரு எளிய வழிமுறை. குடல் கழிவுகளை அகற்றி, குடல் பாதையைச் சுத்தமாக்கும். நீரிழிவுக்காரர்களுக்கும் ஏற்ற உணவு இது.
தேங்காய்ப் பால் தயிர் எடுக்கும் முறை: துருவிய தேங்காய்ப் பூவுடன் தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பாலை எடுக்கவும். எலுமிச்சம்பழம் ஒன்றின் சாறை எடுத்து, தேங்காய்ப் பாலுடன் இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்தால், தேங்காய்ப் பால் தயிர் ரெடி.
Post a Comment