சமையல் குறிப்புகள்! பீர்க்கங்காய் கூட்டு
பீர்க்கங்காய் கூட்டு தேவையான பொருட்கள் : பீர்க்கங்காய்- கால்கிலோ கடலைப் பருப்பு- கால் கோப்பை வெங்காயம்-இன்று தக்காளி-ஒன்று பச்சைமிளகாய்- இ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_3700.html
பீர்க்கங்காய் கூட்டு
தேவையான பொருட்கள் :
பீர்க்கங்காய்- கால்கிலோ
கடலைப் பருப்பு- கால் கோப்பை
வெங்காயம்-இன்று
தக்காளி-ஒன்று
பச்சைமிளகாய்- இரண்டு
இஞ்சி- ஒரு துண்டு
தனியாத்துள்-ஒரு தேக்கரண்டி
மஞ்சத்தூள்-அரைதேக்கரண்டி
கரம்மசாலா -அரைத் தேக்கரண்டி
காய்ந்தமிளகாய்-ஒன்று
சீரகம் -அரைத் தேக்கரண்டி
தேங்காய்துருவல்-கால் கோப்பை
எண்ணெய்-இரண்டு மேசைக் கரண்டி
உப்பு-தேவைகேற்ப
கறிவேப்பிலை-சிறிது
கொத்தமல்லி-சிறிது
செய்முறை :
பீர்க்கங்காயை தோல் சீவி சிறியதுண்டுகளாக நறுக்கவும்.
தக்காளி வெங்காயம் இஞ்சி பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெயை காயவைத்து அதில் சீரகம் காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்து வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்.
பின்பு தக்காளி பச்சைமிளகாய் இஞ்சியைப் போட்டு வதக்கி மற்ற பொடிகளைப் போடவும்.
பின்பு பீர்க்கங்காயையும் கடலைப் பருப்பையும் கொட்டி தேவையான நீர் சிறிது ஊற்றி உப்பைப் போட்டு வேகவைக்கவும்.
மூன்று விசில் வந்த பிறகு இறக்கி குக்கரை திறந்து தேங்காய் துருவலைப் போட்டு கறிவேப்பிலை கொத்தமல்லியைத் தூவவும்.
சுவையான பீர்க்கங்காய் கூட்டு தயார்.இது சப்பாத்திக்கு மிகவும் சுவையாய் இருக்கும்.
Post a Comment