டிப்ஸ்:கோடையை குளிர்ச்சியாக்கலாம்!

டிப்ஸ்:கோடையை குளிர்ச்சியாக்கலாம்! உஸ்.. அஸ்... என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்ப...

டிப்ஸ்:கோடையை குளிர்ச்சியாக்கலாம்! உஸ்.. அஸ்... என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி.. வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யலாம் என வசதி படைத்தோரும், வீட்டிற்கு முன்னால் தென்னை ஓலை வெய்யலாம் என சாதாரண மக்களும் தமது சக்திக்கு ஏற்ப கோடையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் சிலரோ மலை வாசஸ்தலங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். கோடைக்காலம் என்பது இயற்கையின் கொடையே. இந்தக் காலத்தில்தான் மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால் விளை நிலங்களில் பயிராகும் பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன. இதனால் உற்பத்தி அதிகரிக்கும் . பள்ளியின் தேர்வுகள் முடியும் நேரம். கோடை வெயில் மாணவச் செல்வங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் பருவம் அல்லவா... அவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களாக நீங்களும் கோடையை குளிர்ச்சியாகக் கழிக்க இதோ ஜில்லுன்னு சில டிப்ஸ். கோடைக் காலம் ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் தான் சிலருக்கு உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வருவதால் உடலானது சில மாற்றங்களை தாங்கிக்கொள்ளும் சக்தியை இழக்கிறது. * கோடைக் காலத்தில் அதிகாலை 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை பெண்கள் முடித்துவிடுவது நல்லது. * முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. * அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும். * குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து நீரை அருந்த வேண்டும். வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும் 10 நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும். மண்பானையில் வைத்த நீரை அருந்துவது தான் நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது. * அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது ஜூஸ் செய்து அருந்தலாம். * இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். * ஆரஞ்சு, சாத்துகுடி, கீரணிப் பழச் சாறு, எலுமிச்சை பழச் சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி, பப்பாளிப் பழம் சாப்பிடலாம். * குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து ஆறியபின் குடிநீராக அருந்தலாம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்­ணீர் அருந்தினால் தான் வெப்பத்தால் உண்டான உடல் சூடு குறைந்து சமநிலைப்படும். * கோடையின் வெப்பத்தைக் குறைக்க மோரே அருமருந்தாகும். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது. * கோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம். இதனால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும். * மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசனிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். * வாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தல் நலம். இரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் சீரணமடையும் உணவுகளை உண்பது நல்லது. * தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போது, வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக்கூடாது. * மதிய வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. * வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம். தலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். * வெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும். * வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. * கோடை வெப்பத்தின் போது அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல. * சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். கை கால்களுக்கு எண்ணெய் தடவவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். * படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. * வெளியே செல்லும்போது கறுப்பு வண்ண குடைகளை தவிர்த்து வெண்மை நிற குடைகளை பயன்டுத்துவது நல்லது. வெண்ணிற குடைகள் சூரிய வெப்பத்தை உள்வாங்காது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5296022374226121323

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item