சமையல் குறிப்புகள்! ஜாய்ஃபுல் சாலட்
ஜாய்ஃபுல் சாலட் தேவையானவை: மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய கோஸ், லெட்யூஸ் (முட்டை கோஸ் போல இருக்கும்), கேரட், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_6016.html
ஜாய்ஃபுல் சாலட்
தேவையானவை:
மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய கோஸ், லெட்யூஸ் (முட்டை கோஸ் போல இருக்கும்), கேரட், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற குடமிளகாய், வெள்ளரிக்காய், விருப்பப்பட்டால் தக்காளி - 2 கப், வினிகர் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
நறுக்கிய காய்கறி கலவையுடன் வினிகர், சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு குளிர வைத்து பரிமாறவும்.
கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த சாலடை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
Post a Comment