ரசிக்க ருசிக்க…! ராகி கொழுக்கட்டை
ராகி கொழுக்கட்டை தேவையான பொருட்கள் ராகிமாவு -100கிராம், உப்பு - தேவையான அளவு, ஏலக்காய் - 2 சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 1/2. கப், வெல்...
தேவையான பொருட்கள்
ராகிமாவு -100கிராம், உப்பு - தேவையான அளவு, ஏலக்காய் - 2 சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 1/2. கப், வெல்லம் -30 கிராம், தண்ணீர் - தேவைக்கேற்ப, நெய் அல்லது எண்ணெய் -2 டீஸ்பூன்.
செய்முறை
தேங்காய்த் துருவலில் ஏலக்காயைப் போட்டு அதில் பதினைந்து கிராம் வெல்லத்தைக் கலந்து கிளறி இரண்டு நிமிடங்கள் சூடு பண்ணி இறக்கி ஆற வைக்கவும். பிறகு ராகியுடன் உப்பு சேர்த்து நன்றாக (உதிர்த்து) கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரைக் கலந்து கொண்டு ராகிமாவு கையில் ஒட்டாத அளவிற்கு இறுகுகிற வரைக்கும் கிளறவேண்டும். கடைசியாக சில துளி எண்ணெயை கையில் தடவிக் கொண்டு மாவு ஒட்டாமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். சூடு ஆறுவதற்குள் உள்ளங்கையிலோ அல்லது சிறு இலையிலோ வைத்துத் தட்டி... அதன் நடுவில் சூடு பண்ணி ஆற வைத்திருந்த தேங்காய்த் துருவல் மற்றும் வெல்லத்தை வைத்து ஐந்து நிமிடம் ஆவிகட்டினால் கொழுக் மொழுக் ராகி கொழுக்கட்டை ரெடி.
Post a Comment