டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்? பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவ...

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்? பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப் பெட்டியான "பிரிட்ஜ்" என்பதை யாராலும் மறுக்க முடியாது. வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம். இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும்.ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவல் இதோ, முதலில் பழங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்: ஆப்பிள்: இதை குளிர்சாதன பெட்டியில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம். வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. திராட்சை இதனை பிரிட்ஜில் கழுவாமல் வைத்திருந்து 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும், ஆரஞ்சு, கமலா, கிரேப் ஃ புரூட், இதனை 2 வாரங்கள் பிரிட்ஜில் வைக்கலாம் பைனாப்பிள் - நன்கு பழுத்த பிறகு பிரிட்ஜில் 3 - 5 நாட்கள் தர்பூசணி துண்டு - பிரிட்ஜில் 6 - 8 நாட்கள் வைக்கலாம் எலுமிச்சை- இரண்டு வாரம் வைக்கலாம் பெர்ரி பழ வகைகள்- பிளாஸ்டிக் பையில் போட்டு 2-3 நாட்கள் வைக்கலாம். பேரிக்காய், சப்போட்டா, கொய்யா போன்றவைகள் - பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து பிறகு பிரிட்ஜில் 3 -5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒரு மாதம் சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் அன்னாசி (முழுசாக) 1 வாரம் (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் காய்கறிகள்: பீன்ஸ்- இதை நன்கு கழுவி, பிரிட்ஜில் வைத்திருந்து 3 - 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும். கத்தரிகாய்- இதை வெளியிலும் வைக்கலாம், பிரிட்ஜில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 -4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். தக்காளி- வெளியில், பிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம் ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். கேரட்- நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம். பீட்ருட்- இரண்டு வாரம் வைத்திருக்கலாம். காலிபிளவர், முள்ளங்கி-- இரண்டு வாரம் பிரிட்ஜில் வைத்திருக்கலாம். வெண்டைக்காய்- 5 - 7 நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம் உருளைக்கிழங்கு- வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம் வெங்காயம்- வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம் குடமிளகாய்- நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம். கீரைவகைகள்- பிளாஸ்டிக் பையில் 3 - 5 நாட்கள் வைக்கலாம். முட்டகோஸ், செல்லரி,- பிளாஸ்டிக் பையில் 2 வாரங்கள் வைக்கலாம். புரோக்லி, மஷ்ரும் - அதிகபட்சம் 2 -3 நாட்கள் வைக்கலாம். பூசனிக்காய், வெள்ளரிக்காய் - ஒரு வாரம் வைக்கலாம். புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வெள்ளரிக்காய் ஒரு வாரம் தக்காளி 1-2 நாட்கள் காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் காளான் 1-2 நாட்கள் அசைவ உணவுகள்: முட்டை- பிரிட்ஜில் 3 -5 வாரங்கள் வைக்கலாம் அல்லது காலாவதியாகும் நாட்களுக்குள் பயப்னடுத்துவது நல்லது. வேக வைத்த முட்டை- பிரிட்ஜில் 5 -6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். முட்டை வெள்ளைகரு- பிரிட்ஜில் 2 -3- நாட்களுக்குள் முட்டையின் மஞ்சட் கரு- 2 -4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். பிரஷ் சிக்கன், தோல் நீக்காதது - 1 - 2 நாட்கள் வைத்திருக்கலாம். பிரஷ் மட்டன், பீஃப் - 1 -3 நாட்கள் வைக்கலாம். மீன்- 1 - 2 நாட்கள் வைக்கலாம். மீன் க்பிள்ளட்ஸ்/ துண்டுகள்- நான்கு நாட்கள் வைக்கலாம். எறா, நண்டு - பிரிட்ஜில் இரண்டு நாட்கள் வைக்கலாம். சமைத்த இறைச்சி- நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஃ பிரீசரில் வைப்பதானால் நான்கு மாதங்கள் வரை வைக்கலாம். வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் சமைத்த மீன் 3-4 நாட்கள் பிரஷ் மீன் 1-2 நாட்கள் ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள் பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள் உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம் பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள் சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள் பால் பொருட்கள்: மற்றபடி பால். தயிர், வெண்ணெய் போன்ற டெயிரி/dairy பொருட்களை அவைகள் காலாவதியாகும் நாட்களை கவனித்து வாங்கி அதற்குள் பயன்படுத்திடுவது நல்லது. மேலும் அவைகளை நமது குடும்பத்தின் தேவைக்கேற்ற அளவில் வாங்குவது பண விரயத்தையும் தடுக்கும். பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள் மோர் 2 வாரங்கள் தயிர் 7-10 நாட்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.

Related

கிச்சன் டிப்ஸ்--வீட்டுக்குறிப்புக்கள்

கிச்சன் டிப்ஸ் இஞ்சி பூண்டு விழுது பெரும்பாலும் எல்லா ரெசிபிகளுக்கும் தேவைப்படும்.இஞ்சியின் அளவை குறைத்து பூண்டின் அளவை சற்று அதிகமாக எடுத்துக் கொண்டால் சமையல் இன்னும் கமகமக்கும். இஞ்சி பூண்டு ப...

குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால்--வீட்டுக்குறிப்புக்கள்

குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு துடைக்க--வீட்டுக்குறிப்புக்கள்

நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 11:28:23 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,378

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item