சமையல் குறிப்புகள்! எனர்ஜி மில்க்
எனர்ஜி மில்க் தேவையானவை: கொண்டைக் கடலை-2 டீஸ்பூன் (முளை கட்டியது), வெள்ளை கோதுமை - 3 டீஸ்பூன் (முளை கட்டியது), பாதாம் பருப்பு - 5 பருப்புகள...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_6225.html
எனர்ஜி மில்க்
தேவையானவை: கொண்டைக் கடலை-2 டீஸ்பூன் (முளை கட்டியது), வெள்ளை கோதுமை - 3 டீஸ்பூன் (முளை கட்டியது), பாதாம் பருப்பு - 5 பருப்புகள், ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, பனங்கற்கண்டு தூள்- 2 டீஸ்பூன்.
செய்முறை: கொண்டைக் கடலை, கோதுமை ஆகியவற்றுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக மிக்ஸியில் அடித்து 'பால்'எடுக்கவும். வடிகட்டியில் இதனை வடிகட்டவும். பாதாம் பருப்பையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை, கொண்டைக்கடலை பாலுடன், விழுதாக அரைத்த பாதாமையும் கலந்து, ஏலக்காய் தூள் பனங்கற்கண்டு தூள் ஆகியவற்றையும் கலந்து நன்றாக ஒரு கலக்கு கலக்கிய பின்பு பருக தரவும். இன்ஸ்டன்ட் எனர்ஜிக்கு இந்த 'எனர்ஜி மில்க்' எப்போதும் கியாரண்டி!
கூடுதல் சிறப்பு: உடலுக்கு வலுவைத் தரும் புரதச்சத்து நிறைந்த மில்க். குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுத்தால் நிச்சயம் 'ஒன்ஸ்மோர்' கேட்பார்கள்!
Post a Comment