டிப்ஸ்:வீட்டுக் குறிப்புகள்...

டிப்ஸ்:வீட்டுக் குறிப்புகள்... Home Tips - Tips for Women சாம்பாரோ, ரசமோ கொதிக்கும்போது அமர்க்களமான வாசனை வந்தால், அதில் உப்பின் அளவு கு...

டிப்ஸ்:வீட்டுக் குறிப்புகள்... Home Tips - Tips for Women சாம்பாரோ, ரசமோ கொதிக்கும்போது அமர்க்களமான வாசனை வந்தால், அதில் உப்பின் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஈரம் இல்லாத கொத்தமல்லி, கறிவேப்பிலை, துளசி இலை, பச்சை மிளகாய் போன்றவற்றை ஜிப் லாக் கவர்களில் போட்டு,ஃப்ரிட்ஜில் வைத்தால் பல நாட்கள் வரை அப்படியே இருக்கும். காபி போடும்போது, முதலில் ஃபில்டரில் அரை டீஸ்பூன் சர்க்கரை போட்டு, பிறகு காபி பவுடர் போட்டு, டிகாஷன் எடுத்தால் காபி ருசியாக இருக்கும். வெந்தயத்தை முந்தின இரவு ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும். இரும்புச் சத்து உடம்பில் குறைவாக உள்ளவர்கள், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெல்லப்பாகை உட்கொள்வது நல்லது. தினமும் படுப்பதற்கு முன் பால் ஏட்டை கன்னங்களில் தடவி, காலையில் முகத்தைக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருப்பதுடன் பருக்களும் வராது. இரவில் படுப்பதற்கு முன் உள்ளங்கால்களில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்து கொண்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கால்கள் ஊன்றி நடக்கும்போது வலி இருக்காது. கண்களின் மேல் வரும் சிறு சிறு கட்டிளுக்கு, நாமக்கட்டியை குழைத்துப் போட்டால் கட்டி மறைந்து விடும். மரப்பாச்சி பொம்மையையும் சிறிது நீர் விட்டு தேய்த்துப் போடலாம். குழந்தைகளுக்கு பள்ளிக்கு கோந்து, பெயிண்ட் போன்றவற்றைக் கொடுத்து அனுப்ப வேண்டுமா? அந்த டப்பாக்களை ஒரு ஜிப் லாக் கவரினுள் போட்டு வைத்து கொடுத்து அனுப்பினால் பையில் கொட்டாது. தரை துடைக்கும்போது, கொஞ்சம் ஷாம்பூவையும் தண்ணீரில் கலந்து துடைத்தால் வீடு கமகமக்கும். பிசுபிசுக்கான விளக்குகள், நகைகள், வெள்ளி பாத்திரங்கள் போன்ற பொருட்களை கழுவும்போது ஷாம்பூ சேர்த்தால் பிசுக்கு நீங்கி புத்தம் புதிதாகி விடும். கடிதங்களையும் பேப்பர்களையும் போட்டு வைக்க சுவரில் மாட்டும் லெட்டர் ஹோல்டர் பைகளை உபயோகிப்போம்... இத்தகைய ஒரு ஹோல்டரை உங்கள் பீரோவின் கதவுக்கு உள்பக்கமாக மாட்டி வைத்தால், அதில் மின்சார அட்டை, கேபிள் கார்டு, ரேஷன் கார்டு, பாங்க பாஸ் புத்தகங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது சிரமமில்லாமல் டக்கென்று எடுக்கலாம். சுவர்களில் படங்கள் ஒட்டும்போது கம் போட்டு ஒட்டாமல் செல்லோ டேப் போட்டு ஒட்டினால், எடுக்கும்போது படமும் கிழியாது... சுவரும் பாழாகாது. குளியலறையில் பல நாட்களுக்கு நல்ல மணம் பரவி இருக்க வேண்டுமா? கால் மக் தண்ணீரில் ஒரு பாக்கெட் ஷாம்பூவை கரைத்து, சுவரின் மேல் பரவலாகத் தெளித்து விடுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் உங்கள் பாத்ரூம் மணம் வீசும். துணி துவைக்கும்போது சோப்புடன் ஒரு பாக்கெட் ஷாம்பூவும் சேர்த்து விட்டால், துணி வியர்வை நாற்றம் மறைந்து மணமாக இருக்கும். பட்டு, சில்க் காட்டன் போன்ற துணிகளை ஷாம்பூவால் துவைத்தால் பளபளப்பு மங்காது. வெளியூருக்கு கவரிங் நகைகளை எடுத்துச் செல்வதானால், ஜிப் லாக் கவர்களில் வைத்து எடுத்துச் செல்லலாம். இதனால் நகைகள் பழசாகாமல், அப்படியே இருக்கும்.

Related

வீட்டுக்குறிப்புக்கள் 2344477165116263062

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item