அழகு குறிப்புகள்:தேங்காயில் அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள்:தேங்காயில் அழகு குறிப்புகள் முகம் டல்லடிக்கிறதா? வழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிர...

அழகு குறிப்புகள்:தேங்காயில் அழகு குறிப்புகள் முகம் டல்லடிக்கிறதா? வழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள். தினமும் இப்படி செய்துவந்தால், மாசு மருவின்றி பளிங்குபோல முகம் மிளிரும். வெயிலால் வரும் கருமையை விரட்ட.... தேங்காய் பால் - 2 டீஸ்பூன் கடலை மாவு - 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த "பேக்" போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த "பேக்"கில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலம்புவது இன்னொரு "பளிச்" சிகிச்சை. முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்.... கேரட் சாறு - 1 டீஸ்பூன் தேங்காய் பால் - 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் அழகு உங்களை அள்ளிக் கொண்டு போகும். முகத்தில் எண்ணெய் வடிகிறதா? முல்தானிமட்டி - டீஸ்பூன் தேங்காய் பால் - 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்துக்கு "பேக்" போடுங்கள். வாரம் ஒரு முறை இந்த "பேக்" போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும். முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் நீங்க..... உருளைக்கிழங்கு ஜூஸ் - 1 டீஸ்பூன் தேங்காய் பால் - 1 டீஸ்பூன் பயத்த மாவு - 1 டீஸ்பூன் மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு "பேக்" போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த "பேக்" போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும். "சூப்பரான ஒர் ஹேர் பேக்"..... ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்ணீரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டுப் வாருங்கள். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும். உடலைக் குளுகுளுப்பாக்க.... ஒரு வழுக்கை தேங்காயுடன் தேங்காய்ப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்) குளிப்பதற்கு முன் இந்த விழுதை தலை முதல் பாதம் வரை நன்றாக பூசுங்கள். பிறகு தலைக்கு சியக்காய் போட்டு குளியுங்கள். வாரம் ஒரு முறை செய்தால் போதும். உடல் ஜில்லென்று இருப்பதுடன், வாசனையும் வனப்பும் ஆளையே அசரடிக்கும். "கலக்கல் பேக்" இது... உலர்ந்த நெல்லிக்காய் பவுடர் - 1 டீஸ்பூன் மருதாணி பவுடர் - 1 டீஸ்பூன் வெந்தய பவுடர் - 1 டீஸ்பூன் தேங்காய் பால் - 2 டீஸ்பூன் இவற்றை எல்லாம் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் "பேக்" ஆகப் போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை செய்தாலே போதும், கருகரு கூந்தலைப் பெறுவீர். தேங்காய் வைத்தியம்... மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள். பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள். பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சியக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை). வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 4853016370854428369

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item