சமையல் குறிப்புகள் ! நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி தேவையானப்பொருட்கள்: நெல்லிக்காய் - 5 அல்லது 6 தயிர் - 1 பெரிய கப் தேங்காய்த்துருவல் - 1/2 கப் பச்சை மிளகாய் - ...

https://pettagum.blogspot.com/2011/01/blog-post_7760.html
நெல்லிக்காய் தயிர் பச்சடி
தேவையானப்பொருட்கள்:
நெல்லிக்காய் - 5 அல்லது 6
தயிர் - 1 பெரிய கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
நெல்லிக்காயை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளுடன், தேங்காய்த் துருவல். பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தயிரை நன்றாகக் கடைந்து அதில் அரைத்த விழுதையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பச்சடியில் கொட்டிக் கலக்கவும்.
Post a Comment