அம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்! நாட்டு வைத்தியம்!
அன்னமேரி பாட்டி நாட்டு வைத்தியம் அம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்! சீஸனுக்கு தக்குனபடி காய்கள் காய்க்கற மாதிரியே... நோய்களும் மொளை...

https://pettagum.blogspot.com/2011/01/blog-post_2020.html
அன்னமேரி பாட்டி நாட்டு வைத்தியம்
அம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்!
சீஸனுக்கு தக்குனபடி காய்கள் காய்க்கற மாதிரியே... நோய்களும் மொளைக்கறதுதான் வாடிக்கை. கூடுமானவரைக்கும் உஷாரா இருந்துட்டா... அதையெல்லாம் கிட்ட வராமலே தடுத்துட முடியும். அதையும் மீறி வந்துட்டா... கவலையை விடுங்க. அதுக்குத்தான இருக்கேன் இந்த பாட்டி...
அம்மை நோய் வந்தா... வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து மையா அரைச்சி, அம்மை மேல தடவுங்க. வேப்பந்தழையைப் போட்டு அது மேல படுத்து தூங்குறதோட... பனை நுங்கு, இளநீர்னு குளுமையான ஆகாரமா சாப்பிடுங்க. சீக்கிரமே குணம் கிடைக்கும். வீட்டுலயோ... தெருவுலயோ ஒருத்தருக்கு வந்தபிறகு, மத்தவங்களுக்கு பரவாம இருக்கணும்னா... சின்ன வெங்காயத்தை துண்டு துண்டா வெட்டி வாசக்கதவு, ஜன்னல் ஓரங்கள்ல வையுங்க. வேப்பந்தழையை கட்டி தொங்க விடுங்க. முத்தின கத்திரிக்காயை வாங்கிட்டு வந்து, தீயில நல்லா சுட்டு, சின்ன வெங்காயம், சுட்ட மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து பிசைஞ்சு சாப்பிடுங்க. அம்மை நோயில இருந்து உங்களைக் காப்பாத்திக்கலாம்!
வெயில்ல அலையுறதுனால உடம்புல கொப்புளம், எரிச்சல், வேர்க்குரு வரும். இதுக்கெல்லாம் நல்ல மருந்து... சந்தனம். சந்தனக்கட்டையை தண்ணி ஊத்தி நல்லா இழைச்சி (உரசி) வேர்க்குரு வந்த இடத்துல பூசி விடுங்க. பகல் வேளையில புங்கை மரத்தடியில போய் உட்கார்ந்துட்டு வாங்க. இல்லைனா... ஒரு குட்டித் தூக்கம் போடுங்க. குளுகுளுனு இருக்கும். சூடு தணிஞ்சு உடம்புல வர்ற கொப்புளம், எரிச்சல், வீக்கம் எல்லாம் வத்திப்போயிரும். வேற ஏதாவது அலர்ஜியினால நோய் வந்திருந்தாகூட குணமாயிரும்.
அகத்திக்கீரை, பசலைக்கீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரைனு வகை வகையா சாப்பிட்டா... கோடைக்கே உரிய நோய்கள் குணப்படும். வேற சில நோய்களையும் கூட இந்தக் கீரைங்க அண்ட விடாது.
உதாரணத்துக்கு... அகத்திக்கீரையை எடுத்துக்கிட்டா... வாய்ப்புண், வயித்துப்புண் குணமாகறதோட, சூடும் தணியும். மத்தியான சாப்பாட்டோட அகத்திக்கீரை சேர்த்துக்கிட்டீங்கனா... மறுநாள் காலையில தாராளமா மலம் போகும். குழந்தைங்க எலும்பு உறுதியாகுறதுக்கும், உடல் வளர்ச்சி அடையறதுக்கும் அகத்திக் கீரை ரொம்ப நல்லது. ஏன்னா... இதுல சுண்ணாம்புச்சத்து இருக்கு. புத்தி மந்தம், சோம்பேறித்தனம்கூட சரியாகும்.
அகத்திக்கீரையை கூட்டு, பொரியல்னு செஞ்சு சாப்பிடலாம். பருப்போட சேர்த்தும் சாப்பிடலாம். சூப் போட்டும் குடிக்கலாம்.
அகத்திக்கீரை சாப்பிடும்போது இறைச்சி சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டா... சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். அதுமட்டுமில்ல... மருந்துகளோட வீரியத்தையும் அகத்திக்கீரை கொறைச்சிரும்.

Post a Comment