வாசகிகள் கைமணம்! பாசிப்பருப்பு சமோசா பக்கா டேஸ்ட்!

வாசகிகள் கைமணம் ! பாசிப்பருப்பு சமோசா பக்கா டேஸ்ட்! பாசிப்பருப்பு சமோசா தேவையானவை: அரிசி மாவு, வேக வைத்த பச்சைப் பயறு - தலா ஒரு கப், பாசி...

வாசகிகள் கைமணம் ! பாசிப்பருப்பு சமோசா பக்கா டேஸ்ட்!
பாசிப்பருப்பு சமோசா தேவையானவை: அரிசி மாவு, வேக வைத்த பச்சைப் பயறு - தலா ஒரு கப், பாசிப்பருப்பு மாவு, வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா அரை கப், பச்சை மிளகாய் - 4, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பச்சை மிளகாய், பயறு, உருளைக்கிழங்கு, உப்பு, கரம் மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லி போட்டு சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். பூரணம் ரெடி! அரிசி மாவு, பாசிப்பயறு மாவு இரண்டையும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து, இறுக பிசையவும். இந்த மாவில் சிறிய உருண்டைகளாக செய்து, சப்பாத்தி கல்லில் போட்டு வட்டமாக இடவும். இதனை இரண்டாக வெட்டி கோன் போல செய்து அதனுள் பூரணம் வைத்து, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். எல்லாவற்றையும் இது போல் செய்து கொண்டு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பாசிப்பருப்பு சமோசா: மாவுடன் 2 டீஸ்பூன் மைதா, ஒரு டீஸ்பூன் ரவை சேர்த்து செய்தால் ஈஸியாக செய்ய வருவதுடன் சுவையும் வித்தியாசமாக இருக்கும். -------------------------------------------------------------------------
தயிர் டைமண்ட்
தேவையானவை: பால் - 5 கப், பால் பவுடர் - 2 கப், சர்க்கரை - 4 கப், மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா, முந்திரி - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, கலர் தேங்காய் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி ஆற வைத்து, இதனுடன் பால் பவுடரை சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கி, சிறிது தயிர் விட்டு உறைய வைக்கவும். அடுப்பில் கனமான கடாயை வைத்து சர்க்கரையைப் போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்து, உறை ஊற்றிய தயிரை சர்க்கரைப் பாகில் சேர்த்து கை விடாமல் கிளறவும். இரண்டும் சேர்ந்து கெட்டியாக திரண்டு வரும்போது நெய், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும். ஒரு டிரேயில் லேசாக நெய் தடவி, தயிர்க் கலவையைக் கொட்டி, பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் கலர் தேங்காய்த்துருவலை தூவி, ஒரு தட்டால் சமப்படுத்தவும். சிறிது ஆறியதும் சதுரம் அல்லது டைமண்ட் வடிவில் துண்டுகள் போடவும். தயிர் டைமண்ட்: கலர் தேங்காய் துருவல் கிடைக்கவில்லையெனில், தேங்காயை வறுத்து அதில் சிறிது ஃபுட் கலரை சேர்க்கலாம். கால் கப் முந்திரியை அரைத்து சேர்த்து செய்தால் ருசி அமோகமாக இருக்கும். ---------------------------------------------------------------------------------------
சேமியா மில்க் பேடா
தேவையானவை: சேமியா, சர்க்கரை - தலா ஒன்றரை கப், பால் - கால் கப், இனிப்பு இல்லாத கோவா - ஒரு கப், முந்திரி, திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், ஜாதிக்காய்த்தூள் - சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், (அலங்கரிக்க) முந்திரி - சிறிதளவு செய்முறை: சேமியாவை நெய் விட்டு வறுத்து, சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். கோவாவைப் பிசைந்து சேமியாவுடன் கலக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி, அதில் சர்க்கரையைப் போட்டுக் கரைத்து, சேமியா - கோவா கலவையைப் போட்டு கொதிக்க வைக்கவும். இதில், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். கெட்டியாகத் திரண்டு வரும்போது இறக்கி, ஆற வைத்து, எலுமிச்சம்பழ சைஸில் உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை லேசாக தட்டி வடை போல செய்து, நடுவில் நெய்யில் வறுத்த முந்திரியைப் பதிக்கவும். சேமியா மில்க் பேடா: ஒரு டேபிள்ஸ்பூன் கசகசா (அ) ரவையை லேசாக வறுத்து சேமியாவுடன் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 8487320822349739714

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item