வாசகிகள் கைமணம்! ஜீரணப் பொடி - ஜாங்கி ரி ட்ராப்ஸ் - பட்டாணி ஸ்டஃப்டு பூரி

வாசகிகள் கைமணம் ஜீரணப் பொடி தேவையானவை: 1) கடலைப்பருப்பு - 2 கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப், துவரம்பருப்பு - கால் கப்,...

வாசகிகள் கைமணம்
ஜீரணப் பொடி
தேவையானவை: 1) கடலைப்பருப்பு - 2 கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப், துவரம்பருப்பு - கால் கப், கோதுமை, அரிசி - தலா 2 கைப்பிடி. 2) மிளகு, தனியா - தலா கால் கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: முதலில் கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, பொடித்துக் கொள்ளவும். இரண்டாவதாக கொடுத்துள்ளவற்றைத் தனித்தனியாக எண்ணெயில் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். இந்த இரண்டு பொடிகளையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். சாதத்துடன் இந்தப் பொடியைப் போட்டு கலந்து, நல்லெண்ணெய் விட்டு சாப்பிட, நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். ஜீரணப் பொடி: சுண்டைக்காயை நன்றாக வறுத்து சேர்த்துச் செய்தால் அருமையாக இருக்கும் ------------------------------------------------------------------------------------
ஜாங்கிரி ட்ராப்ஸ்
தேவையானவை: முழு உளுத்தம்பருப்பு - அரை கப், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - அரை கிலோ, ரோஸ் எசன்ஸ், லெமன் கலர், ட்ரை ஃப்ரூட்ஸ் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: உளுத்தம்பருப்பு, பச்சரிசியை பதினைந்து நிமிடம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து, மெதுவடைக்கு அரைப்பதுபோல் அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து, லேசாக பிசுக்கு தட்டும் அளவுக்குக் கொதிக்க வைத்து (பாகு பதம் வேண்டாம்) எசன்ஸ், கலர் சேர்த்து இறக்கி, கொதிநீர் உள்ள அகலமான பாத்திரத்தின் நடுவில் சூடாகவே இருக்கும்படி வைக்கவும். ஒரு கொட்டாங்குச்சியை நன்றாக சுத்தம் செய்து, அதில் பெரிய துளை போட்டு, பாதி அளவு அரைத்த மாவை அதனுள் போடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அதன் மேல் இந்தக் கொட்டாங்குச்சியை மேலும் கீழும், பக்கவாட்டிலும் அசைத்தால் பெரிய துளிகளாக எண்ணெயில் விழுந்து பொரியும். அதைத் திருப்பிவிட்டு எடுத்து சர்க்கரை ஜீராவில் போடவும். ஊறியதும் எடுத்து வடிதட்டில் போட்டு, ஆறியதும் ட்ரை ஃப்ரூட்ஸ் கலந்து அகலமான கிண்ணத்தில் ஊற்றிப் பரிமாறவும். வாயில் போட்டதும் அமிர்தமாக இனிக்கும். ஜாங்கிரி ட்ராப்ஸ்: உளுத்தம்பருப்பு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், சிறிது மைதா மாவை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். --------------------------------------------------------------------------------
பட்டாணி ஸ்டஃப்டு பூரி
தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், பச்சைமிளகாய் - 2, உருளைக்கிழங்கு - 1, மைதா மாவு - 2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பட்டாணியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி, லேசாக வேக வைத்து மசித்து, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து பட்டாணி விழுதுடன் சேர்த்து கரண்டியால் கலக்கவும். மைதா மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுப் பிசைந்து, சிறிய பூரிகளாக இட்டுக் கொள்ளவும். இதன் நடுவில் உருளை, பட்டாணி கலவையை வைத்து, இன்னொரு பூரியால் மூடி ஒட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். பட்டாணி ஸ்டஃப்டு பூரி: ஒரு டீஸ்பூன் நெய்யில் சிறிது கடலைமாவை வறுத்து, உருளை, பட்டாணி கலவையுடன் சேர்த்துச் செய்தால் சுவை நன்றாக இருக்கும்

Related

சமையல் குறிப்புகள் 510371872007056583

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item