சமையல் குறிப்புகள் ! வெங்காய சட்னி
வெங்காய சட்னி தேவையான பொருள்கள்: வெங்காயம் - நான்கு தக்காளி - மூன்று காய்ந்த மிளகாய் - ஆறு உப்பு - தேவையான அளவு உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ...

https://pettagum.blogspot.com/2011/01/blog-post_6161.html
வெங்காய சட்னி
தேவையான பொருள்கள்:
வெங்காயம் - நான்கு
தக்காளி - மூன்று
காய்ந்த மிளகாய் - ஆறு
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன
புளி - கொஞ்சம
கறிவேப்பிலை - கொஞ்சம
பூண்டு - நான்கு பல்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, போட்டு வறுத்து கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயம், தக்காளி அனைத்தும் ஒன்றன் பின் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
குறிப்பு:
தக்காளி அல்லது புளி இரண்டில் ஒன்றை சேர்த்து அரைக்கலாம்.
தேவைப்பட்டால் எண்ணெய் கடுகு, பொருங்காயம் சேர்த்து தாளித்து கொள்ளலாம்.
இவை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Post a Comment