இளமை காக்கும் உணவு முறைகள்! உடல் நலக் குறிப்புகள்!!

இளமை காக்கும் உணவு முறைகள்! உடல் நலக் குறிப்புகள்!! பிளட் பிரஷ்ஷ ர் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். எனவே, காரணம் இல்லாமல் உங்களுக்கு...

இளமை காக்கும் உணவு முறைகள்! உடல் நலக் குறிப்புகள்!! பிளட் பிரஷ்ஷர் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். எனவே, காரணம் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால் உடனே டாக்டரிடம் உங்கள் பிரஷ்ஷரைப் பார்க்கும்படி சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில் சிலர் தங்களுக்கு பிளட் பிரஷ்ஷர் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகிவிடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும். உடம்பெல்லாம் வலிக்கிறதா ? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தினமும் கொஞ்சம் வேப்பம் கொழுந்து சாப்பிட்டு வாருங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு இளஞ்சூடான தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது; சாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஜீரணத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். பெண்களே, உங்களுக்குத் தாய்ப்பால் சுரக்கவில்லையா ? எள் உருண்டை நிறையச் சாப்பிடுங்கள். எள், நிறைய பால் சுரக்கும்படி செய்கிறது. உடம்பு எப்போதும் சூடாக இருக்கிறதா? கொஞ்சம் வெந்தயத்தைத் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். காலையில் எழுந்ததும் இந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு வாயில் வெந்தயத்தைப் போட்டு மென்று தின்னுங்கள். சூடு தணிந்துவிடும். வெயில் காலத்தில் பலருக்கு நீர்க்கடுப்பு வரும். நீர்க்கடுப்பு வந்தால் ஒரு கிளாஸ் மோரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாப்பிடுங்கள். மோரில் இளநீர் கலந்து சாப்பிடுங்கள். நீர்க்கடுப்புக் குணமாகிவிடும். குழந்தைகள் குடல் வளர்ச்சி பெறச் சிறந்த டானிக் எது தெரியுமா? தேன். உங்கள் குழந்தைகளுக்குத் தினசரி கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் தேன் கொடுத்து வாருங்கள். குழந்தைகளின் தசைகளும் உடலும் வலிமை பெறும் பெண்கள் அடிக்கடி தலைவலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. தலைவலி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்குக் குழந்தைகள் பிறப்பதில்லை! தினசரி ஏதாவது ஒரு காய்கறி சூப் சாப்பிடுங்கள். காய்கறி சூப்பைச் சாப்பிடுவதால் உடலுக்குப் பலம் கிடைக்கிறது. சுறுசுறுப்பு ஏற்படுகிறது. வேப்பம் விதையில் உள்ள பருப்பையும் வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகிறது. தோலில் ஏற்படும் நோய்களும் கூட இதனால் குணமாகின்றன. சாப்பிட்டவுடன் வாந்திவரும் போல் இருந்தால் இலவங்கம், அல்லது ஏலக்காயை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். குமட்டல் நிற்கும். வாந்தி வராது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 453104744268888862

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item