வாசகிகள் கைமணம் !! வாழைப்பூ தோசை!! வாழைப்பூ வடை!
வாழைப்பூ தோசை தேவையானவை: நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், அரிசி - 2 கப், உளுந்து - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியா...

https://pettagum.blogspot.com/2011/01/blog-post_17.html
வாழைப்பூ தோசை
தேவையானவை: நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், அரிசி - 2 கப், உளுந்து - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி - தலா கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 5, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை வேக வைத்துக் கொள்ளவும். அரிசி, உளுந்தை ஊற வைத்து சுத்தம் செய்து அரைக்கவும். இதனுடன் வேக வைத்த வாழைப்பூ, உப்பு சேர்த்து மேலும் நன்றாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி போட்டு வதக்கி, அரைத்த மாவில் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி முறுகலாக எடுக்கவும்.
தேங்காய் சட்னி, வெங்காய சட்னியை இதற்கு தொட்டுக்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------
வாழைப்பூ வடை



வாழைத்தண்டு சூப்
தேவையானவை: இளம் வாழைத்தண்டு 2, பார்லி 50கிராம், மிளகுப்பொடி 4 ஸ்பூன், எலுமிச்சம்பழச்சாறு2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, அரை கப் பால்.
செய்முறை: வாழைத்தண்டைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜுஸ் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும். பார்லியை இளம் சிவப்பாக வறுத்துப் பொடியாக்கவும். அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். வாழைத் தண்டு சாறில் பார்லி மாவைக் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின் இறக்கி வைத்து மிளகுப் பொடி உப்பு, எலுமிச்சம்பழச்சாறு மற்றும் பால் சேர்த்து சூடாக அருந்தவும்.வாழைத்தண்டை பச்சை சாறாக அருந்த பலருக்கும் பிடிக்காது. அதனால் இப்படிச் செய்வதால் பிடித்தமான உணவும் ஆகிவிடுகிறது!
குறிப்பு: வாழைத்தண்டு சாறு பச்சையாக அருந்தினால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. சளி பிடித்துவிடும். இப்படிச் சூப்பாக அருந்தும்போது விருப்பமாகவும் இருக்கும். சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பைக் கற்களுக்கு அருமையான மருந்து. உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் குறைத்து உடல் எடையையும் குறைக்க செய்யும். அருமையான மருத்துவ உணவு!
---------------------------------------------------------------------------------
வாழைத்தண்டு சூப் -2
இது பர்மாவில் தயாரிக்கப்படும் ஒரு வகை அசைவ சூப். இந்த சூப் பர்மா நூடுல்ஸுடன் நன்றாக இருக்கும்
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - நார் நீக்கி 1' துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இறால் - 1/2 கப் கழுவி சுத்தமாக்கியது
கடலை மாவு - 1/2 கப்
வெங்காயம் - 2 மே.க
எண்ணெய் 2 மே. க.
இஞ்சி பூண்டு அரவை - 1 தே . க
சிவப்பு மிளகாய்- 1 தே. க ( வறுத்து பொடி செய்தது )
மஞ்சள் பொடி - 1 தே. க
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - 1 மே . க
செய்முறை
முதலில் இறாலை மிக்ஸியில் இட்டு கொர,கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு வெங்கயாத்தை போட்டு வதக்கவும்
வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுதை சேர்க்கவும்
அடுத்து வாழைத்துண்டுகளை சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
தண்டு நன்றாக வெந்ததும், இறால் விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
கடலை மாவை ஒரு கப் நீரில் கரைத்து சூப்பில் ஊற்றவும்
மஞ்சள் பொடி மிளகாய் பொடி உப்பு சேர்த்து, சூப்பிற்க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்
பறிமாறும் போது சூப்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி மேலாக பொரித்த வெங்காயம். கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்.
Post a Comment