சருமப் பொலிவுக்கு சம்பங்கி பூ தைலம்! இயற்கை தரும் இளமை வரம்!

இயற்கை தரும் இளமை வரம்! சருமப் பொலிவுக்கு சம்பங்கி பூ தைலம்! மலர்களில் சற்றே வி த்தியாசமான பூ சம்பங்கி. சீக்கிரத்தில் வாடாத இதன் தடிமனான இ...

இயற்கை தரும் இளமை வரம்! சருமப் பொலிவுக்கு சம்பங்கி பூ தைலம்! மலர்களில் சற்றே வித்தியாசமான பூ சம்பங்கி. சீக்கிரத்தில் வாடாத இதன் தடிமனான இதழ்களும், வாசனையும் நம் அழகுக்கு அழகு சேர்க்கும். மல்லிகைப்பூவின் வரிசையில் வரும் இந்த சம்பங்கியின் மலர் மட்டுமல்ல... இதன் விதை, இலை என அனைத்துப் பாகங்களும் அழகைக் கூட்டும் ஓர் அற்புத தொழிற்சாலை! சம்பங்கியின் சகல அழகு ரகசியங்களையும் இந்த இதழில் பார்ப்போமா..! கொளுத்தும் கோடை வெயிலால் சொறி, படை வேர்க்குரு என சருமத்தை சகட்டுமேனிக்கு தாக்கத் தொடங்கும். இதிலிருந்தெல்லாம் சருமத்தைப் பாதுகாக்கிறது சம்பங்கி பூ தைலம். அரை கிலோ தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி, அதில் 50 கிராம் சம்பங்கி பூவைப் போட்டு இறக்குங்கள். இந்த தைலத்தை உச்சி முதல் பாதம் வரை தடவி, நன்றாகத் தேய்த்து, சம்பங்கி பூ குளியல் பவுடர் பயன்படுத்திக் குளியுங்கள். வேர்க்குரு விரட்டப்படுவதுடன், குளிர்ச்சியுடனும் வாசனையாகவும் நம் உடல் ஜிலுஜிலுக்கும். சம்பங்கி பூ குளியல் பவுடர் தயாரிக்க... சம்பங்கி - 100 கிராம், வெள்ளரி விதை - 20 கிராம், பயத்தம்பருப்பு-200 கிராம்... இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தைலம் தேய்த்து குளிக்கும்போது இந்தப் பவுடரைப் பயன்படுத்தி வந்தால்.. தோல் மினுமினுப்பாக இருக்கும். உடம்பில் உள்ள தேவையற்ற முடியை நீக்குகிறது சம்பங்கி விதை. சம்பங்கி விதை - 100 கிராம், கோரைக்கிழங்கு - 200 கிராம், பூலாங்கிழங்கு - 100 கிராம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை ஒருநாள் விட்டு ஒருநாள் பூசி வர... தேவையற்ற முடி வலுவிழந்து உதிரத் தொடங்கும். முகத்துக்கு வசீகர அழகைக் கொடுக்கிறது சம்பங்கி ஃபேஸ் பேக். சம்பங்கி பூ - 2, தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து அரைத்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக ஜொலிக்கும். சிலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு... சம்பங்கி விதை - 50 கிராம், சம்பங்கி பூக்கள் - 50 கிராம், துளசி - 10 கிராம், லவங்கம் - 5 கிராம், வேப்பிலை-10 கிராம் இவற்றை அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் குழைத்து பருக்கள் மீது தடவி வர.. பருக்கள் குறையும். ஒரு கைப்பிடி சம்பங்கி பூக்களை, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வாரம் இருமுறை ஆவி பிடித்து வர.. முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தலை பொடுகை போக்கி, தலைக்கு பாதுகாப்பை கொடுக்கிறது சம்பங்கி இலை. வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், சம்பங்கி இலை - 3... இரண்டையும் சேர்த்து அம்மியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதில் 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறை கலந்து தலைக்கு பேக் போடுங்கள். அரிப்பு, பொடுகு அத்தனையும் நீங்கி, கூந்தல் வாசம் வீசும். உடம்பைத் தாங்கி நிற்கும் பாதங்களில் ஏற்படும் வலி மற்றும் வெடிப்பைப் போக்குகிறது சம்பங்கி. இதன் இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவிவர... பாதவலி பறந்துவிடும். 200 கிராம் நல்லெண்ணெயுடன், 50 கிராம் சம்பங்கி பூக்களைப் போட்டுக் காய்ச்சுங்கள். இதில் சிறிது விளக்கெண்ணெய் கலந்து கணுக்கால், பாதத்தில் தடவுங்கள். சொரசொரப்பு, வெடிப்பு விருட்டென ஓடிவிடும். இந்த தைலத்தில் விளக்கெண்ணெய் சேர்க்காமல் நன்றாக ஆற வைத்து, எலுமிச்சைச் சாறை கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதை தினமும் காலை, இரவில் தடவி வர.. பாதம் பஞ்சு போல் மென்மையாக இருக்கும். அஜீரணத்துக்கு அருமருந்து! மருத்துவ குணம் நிறைந்த, பூஜைக்கு ஏற்ற சம்பங்கி பூ வாசனையை அள்ளித்தரும். கரிபோளம்-9 கிராம், சம்பங்கி பூ தூள் - 35 கிராம் இரண்டையும் நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி இறக்கி, ஆற வைத்துக் கொள்ளவும். காதில் திருகு வலி, புண் ஏற்பட்டால், இந்த எண்ணெயை 2 சொட்டு காதில் விடலாம். புண் ஆறி, வலியும் எடுக்காது. . 4 சம்பங்கி பூவுடன், ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை சூடு பறக்க நெற்றிப் பகுதியில் தடவினால்.. தாங்க முடியாத தலைவலியும் சட்டென குணமாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 சம்பங்கிப் பூவைப் போட்டு காய்ச்சி.. பாதியாக குறுக்குங்கள். இந்த தண்ணீரை காலை, மாலை குடித்து வர... மலச்சிக்கல் மிரண்டு ஓடும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும். வெயிலால் வந்த ஜுரம் குணமாகும். சம்பங்கி பூவை சிறிது தண்ணீர் விட்டு அரையுங்கள். இந்த விழுதை கண்களை சுற்றி பூசி.. துணியால் கட்டி பத்து நிமிடத்துக்குப் பிறகு கழுவுங்கள். கண் நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி... இவற்றையெல்லாம் போக்கி, குளிர்ச்சியைத் தந்து, கண்களை பளீரென பிரகாசிக்க வைக்கும். காய்ச்சிய பாலில் 2 பூவை போட்டு ஆற வையுங்கள். இதில் சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் வீதம் 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர உடம்பில் தெம்பும் பலமும் பெருகும்.

Related

மூலிகைகள் கீரைகள் 430273419051625639

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item