சமையல் குறிப்புகள் ! அருமையான செட்டிநாடு பூண்டுகுழம்பு

1) செட்டிநாட்டு பூண்டு குழம்பு தேவையானவை : பூண்டு - 12 பல் சின்னவெங்காயம் - 20 தக்காளி - 1 பெரியது கரிவேப்பிலை - 5 புளி - 1 எலுமிச்சியளவு ...

1) செட்டிநாட்டு பூண்டு குழம்பு தேவையானவை : பூண்டு - 12 பல் சின்னவெங்காயம் - 20 தக்காளி - 1 பெரியது கரிவேப்பிலை - 5 புளி - 1 எலுமிச்சியளவு மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூண் பெருங்காயம் - 1/4 டீஸ்பூண் மிளகாய்பொடி - 1 டீஸ்பூண் உழுந்து - 1 டீஸ்பூண் கடுகு - 1 டீஸ்பூண் தேங்காய்பால் - 2 டேபில் ஸ்பூண் எண்ணெய் - தேவைக்கு உப்பு - தேவைக்கு தேவையானவை மல்லி - 2 டேபிள்ஸ்பூண் ஜீரகம் - 1 டீஸ்பூண் கசகசா(வெள்ளை) - 1 டீஸ்பூண் மிளகு - 1/4 டீஸ்பூண் காய்ந்தமிளகாய் - 3 இஞ்சி - 1 துண்டு எண்ணெய் - 1 டீஸ்பூண் அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூண் எண்ணெய் ஊற்றி தேவையானவை 2 ல் உள்ளவற்றை தனி தனியாக வறுத்து அதை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து வைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு(நீளவாக்கில்), தக்காளி நறுக்கி கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூண் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும் . பின்னர் பூண்டு போட்டு சிறிது வதக்கி வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். நன்கு வதங்கியவுடன் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,காயம் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.தேங்காய் பால் சேர்த்து 1 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்து வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். அருமையான செட்டிநாடு பூண்டுகுழம்பு ரெடி 2) சுவையான பூண்டு குழம்பு இந்த குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். இதனை எளிதில் செய்து விடலாம். இதை அனைத்து வகை சாதத்துடனும், அனைத்து வகை பலகாரத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். வாயு தொல்லை, ஜீரணம் ஆகாதவர்களுக்கு ஏற்ற குழம்பு. வாரத்தில் ஒரு முறை வைத்து சாப்பிடலாம். இதையும் என் அன்பு அம்மா தான் கற்றுக்கொடுத்தது. எனக்கு மிகவும பிடித்த குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. நீங்களும் செய்து பாருங்கள். தேவையான பொருள்கள் : - பூண்டு - 1கப் சின்ன வெங்காயம் - 1/2கப் தக்காளி - 1கப் பொடியாக நறுக்கியது புளித் தண்ணீர் - 1/2கப் தேங்காய் துருவல் - 1/2கப் சீரகம் - 1ஸ்பூன் சோம்பு - 2ஸ்பூன் மிளகு - 1ஸ்பூன் வெந்தயம் - 1ஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/4ஸ்பூன் மிளகாய் தூள் - 2ஸ்பூன் தனியா தூள் - 3ஸ்பூன் மஞ்சள் துள் - 1/4ஸ்பூன் கடுகு, உளுந்தப்பருப்பு - 1ஸ்பூன் கறிவேப்பிலை - 1கொத்து கொத்தமல்லி தழை - 1/4 கப் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை:- பூண்டையும் வெங்காயத்தையும் தோல் உரித்து நன்கு கழுவி தனியே வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சீரகம், சோம்பு, மிளகு, 2பூண்டு பல் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மைப்போல் அரைக்கவும். பின்பு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உரித்த பூண்டையும் வெங்காயத்தையும் சேர்த்து பொன் நிறமாக வதக்கி தனியே எடுத்துக் கொள்ளவும். பின்பு அதே வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கி கொள்ளவும். நன்கு வதக்கிய பின்பு வறுத்த பூண்டையும், வெங்காயத்தையும் அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கி புளித்தண்ணீர், அரைத்த மசாலா, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அதை கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழைகளை தூவவும். தேவையான பொழுது லேசாக சுட வைத்து பரிமாறவும். சுவையான பூண்டு குழம்பு தயார்.

Related

சமையல் குறிப்புகள் 4067464177200790537

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item