சிறுசேமிப்பு! முகவராவது எப்படி?
முகவராவது எப்படி? அஞ்சலக தொடர் வைப்புத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே முகவராக முடியும். முகவராக விரும்புபவருக்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும்...

முகவராவது எப்படி?
அஞ்சலக தொடர் வைப்புத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே முகவராக முடியும். முகவராக விரும்புபவருக்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி (அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி-யும் ஏற்றுக்கொள்ளப்படும்). இருப்பிட ஆதாரமாக குடும்ப அட்டையின் நகல் மற்றும் கல்விச் சான்றுகளுடன், பதிவு பெற்ற அரசு அலுவலர்கள் இருவரிடம் நன்னடத்தைச் சான்று பெற்று, மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) மற்றும் சென்னையில் உள்ள சிறுசேமிப்புத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து முகவர் நியமனம் பெற்றிடலாம். இது பணம் கையாளும் வேலை என்பதால், குறிப்பிட்ட அளவுக்கு கையில் பணம் வைத்திருக்க வேண்டும்.
தொடர்புக்கு: ஆணையர், சிறுசேமிப்புத் துறை, 735, அண்ணா சாலை, சென்னை- 600 002. தொலைபேசி: 044-28527095/28527486.
வட்டியை உயர்த்த வேண்டும்!
சிறுசேமிப்புத் துறைக்குப் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியிருக்கிறார் உமாசங்கர்.
"சிறுசேமிப்பு மூலம் திரட்டப்படும் தொகை, மாநில அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதி மேம்பாடு ஆகியவற்றுக்கு பெரிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. ஆக, அஞ்சலக சேமிப்பு என்பது வீட்டுக்கும், நாட்டுக்கும் உதவும் திட்டமாகும். அப்படிப்பட்ட திட்டத்தில் மக்களை மேலும் ஈர்க்க வேண்டும் என்பதற்கு நான் முயற்சி எடுத்து வருகிறேன். அதற்காக சிறுசேமிப்புக்கு வழங்கப்படும், வட்டி விகிதம், வங்கிகள் வழங்குவதைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும். வரிவிலக்கு இப்போது உள்ளதைக் காட்டிலும் கூடுதலாக வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் அரசுக்கு எழுதியிருக்கிறேன்" என்ற உமாசங்கர்,
"சிறுசேமிப்பை ஊக்கப்படுத்த ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட விளம்பர முயற்சிகள் பெரிதாக பலன் தரவில்லை என்பதால், குறும்படங்கள் மூலம் கிராமங்கள்தோறும் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்றும் கூறினார்
Post a Comment