மாரடைப்பும் நெஞ்சுவலியும் சில வைத்திய முறை நாட்டு வைத்தியம்!

இந்தக் காலத்துல மாரடைப்பும் நெஞ்சுவலியும் இளசுங்களைகூட தாக்க ஆரம்பிச்சிடுச்சி. சரியான உணவு பழக்கம் இல்லாம போறதுதான் இதுக்கெல்லாம் க...

இந்தக் காலத்துல மாரடைப்பும் நெஞ்சுவலியும் இளசுங்களைகூட தாக்க ஆரம்பிச்சிடுச்சி. சரியான உணவு பழக்கம் இல்லாம போறதுதான் இதுக்கெல்லாம் காரணம். ஒட்டுமொத்த நோயும் ஒரே நேரத்துல வந்து உடம்பை உலுக்கி போட்டுரும். இதுலயிருந்து தப்பிக்கறதுக்கு சில வைத்திய முறைங்களைச் சொல்றேன், கேட்டுக்கிடுங்க..! நாட்டு மருந்து கடையில 'அமுக்கிராங்கிழங்கு'னு ஒண்ணு விக்கிறாங்க. அதைக் கொஞ்சமா எடுத்துக்கிட்டு, சின்னச் சின்ன துண்டுகளா வெட்டி வெச்சுக்கிடணும். மண் சட்டியில பாலை ஊத்தி, துணியால வேடு கட்டி, அதுக்கு மேல (துணியின் மேல்) கிழங்கைப் போட்டு, ஆவியிலயே நல்லா வேக வெச்சு எடுக்கணும். பிறகு, இதை வெயில்ல காய வெச்சு பொடியாக்கிக்கணும். அதுல ஒன்றரை ஸ்பூன் எடுத்து, தேன்ல குழைச்சு, தினமும் காலையில, சாயங்காலம்னு ரெண்டு வேளைக்கு வெறும் வயித்துல சாப்பிடணும். இப்படித் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டு வந்தா... நெஞ்சுவலி, படபடப்பு, மார்பு எரிச்சல் எல்லாம் ஓடியே போயிரும். செம்பரத்தம்பூ வைத்தியமும் கைவசம் இருக்கு. இதுல ஏழு பூவை எடுத்து, ஒண்ணரை டம்ளர் தண்ணி விட்டு, அடுப்புல ஏத்திக் காய்ச்சணும். இது அரை டம்ளரா குறுக்கினதும், ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு சேர்த்து, திரும்பவும் காய்ச்சணும். பிறகு, இதை ரெண்டு பாகமா பிரிச்சிக்கிட்டு... காலையில, சாயங்காலம்னு ஒரு மண்டலத்துக்கு ரெண்டுவேளை குடிச்சிட்டு வந்தா நல்லா குணம் தெரியும். முதல் வாரத்திலயே குணம் தெரிய ஆரம்பிச்சிரும். செம்பரத்தம்பூ கிடைக்காட்டி, 10 செம்பருத்திப்பூவைப் பயன்படுத்தியும் இதேபோல செய்து குடிச்சிட்டு வரலாம். அப்புறம், வெள்ளைத் தாமரைப்பூவுலயும்கூட இதைச் செய்யலாம். இந்தப் பூ பெருசா இருக்கும்கிறதால... முழு பூ, இல்லைனா... அரை பூ இருந்தாலே போதும். நாட்டு மருந்துக் கடையில 'மருதம்பட்டை'னு கேட்டா கொடுப்பாங்க. அதை 10 கிராம் வாங்கிட்டு வந்து... சின்னதா வெட்டி, புது மண்சட்டியில போட்டு, ஒரு டம்ளர் தண்ணி விட்டு, கால் டம்ளரா காய்ச்சி வடிகட்டிக்கணும். இந்தத் தண்ணிய தினமும் ஒரு மண்டலத்துக்கு காலையில, சாயங்காலம் 25 மில்லி அளவுக்குக் குடிச்சிட்டு வந்தா... மாரடைப்பும், நெஞ்சுவலியும் நீங்கிரும். ஒரு தடவை பயன்படுத்தின மருதம்பட்டையையே மூணு நாளைக்குத் திரும்பத் திரும்ப தண்ணி விட்டு காய்ச்சிக்கலாம். அந்த அளவுக்கு அதுல காரம் இருக்கும். ஒரு பாத்திரத்துல ரெண்டு டம்ளர் தண்ணியைஎடுத்துக்கிட்டு, அதுல ஒரு கைப்பிடி துளசி இலையப் போடுங்க. பத்து கிராமோ, பதினஞ்சி கிராமோ... பனங்கல்கண்டையும் சேர்த்துக்கோங்க. ஒரு டம்ளரா ஆகுற வரைக்கும் காய்ச்சி வடிகட்டுங்க. இதுல 4 ஸ்பூன் தேனை கலந்து காலை, மதியம், மாலைனு மூணு வேளையும் சாப்பாட்டுக்கு முன்ன குடிங்க. இப்படியே தொடர்ந்து ரெண்டு, மூணு நாள் குடிச்சிட்டு வந்தா... நெஞ்சு வலி ஏற்றுமதி ஆகி, நிம்மதி இறக்குமதியாகும்.

Related

நாட்டு வைத்தியம் 7090920708527948715

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item