சமையல் குறிப்புகள் ! செட்டிநாட்டு அறுசுவை தேன் குழல்
செட்டிநாட்டு அறுசுவை தேன் குழல் தேவையான பொருட்கள் : பச்சை அரிசி - 1 கிலோ உளுத்தம் பருப்பு - 300 கிராம் சீரகம் - 1 தேக்கரண்டி எண்ணெய் - ...

https://pettagum.blogspot.com/2011/01/blog-post_4594.html
தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி - 1 கிலோ
உளுத்தம் பருப்பு - 300 கிராம்
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. பச்சை அரிசியைக் தண்ணீரில் நன்றாகக் கழுவி வடிகட்டி நிழலில் காய வைக்கவும்.
2. உளுத்தம் பருப்பை இலேசாக பொன்னிறமாக இருப்புச் சட்டியில் வறுத்து எடுக்கவும்.
3. அரிசி, உளுந்தைச் சேர்த்து மிஷினில் கொடுத்து நைசாகத் திரித்து வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு அகலமான பாத்திரத்தில் மாவுடன் உப்பு, சீரகம், போட்டுக் கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டி ஆகும் வரை நன்றாக பிசையவும்.
5. மாவைச் சிறிதாக உருட்டிக் தேன் குழல் கட்டையில் வைக்கவும்.
6. அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தேன் குழல் கட்டையில் இருந்து வட்டமாகப் பிழியவும். சிவக்காமல் வெந்தவுடன் எடுக்கவும்.
Post a Comment