‌பிர‌ண்டை தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் ---இய‌ற்கை வைத்தியம்

‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் ‌பிர‌ண்டை எ‌ன்பது ஒரு தவார‌ம், இது கொடி போல வளரு‌ம். இத‌ன் த‌ண்டு‌ப் பகு‌திதா‌ன் உ‌ண்ப‌த‌ற்கு ஏ‌ற்றதாகு...

‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் ‌பிர‌ண்டை எ‌ன்பது ஒரு தவார‌ம், இது கொடி போல வளரு‌ம். இத‌ன் த‌ண்டு‌ப் பகு‌திதா‌ன் உ‌ண்ப‌த‌ற்கு ஏ‌ற்றதாகு‌ம். ‌பிர‌ண்டை‌யி‌ல் ஓலை‌ப் ‌பிர‌ண்டை, உரு‌ட்டு‌ப் ‌பிர‌ண்டை என பல வகை உ‌ண்டு. இவ‌ற்‌றி‌ன் குண‌ம் ஏற‌க்குறைய உ‌ண்டாகு‌ம். இ‌தி‌ல் மு‌ப்‌பிர‌ண்டை ‌கிடை‌ப்பது அ‌ரிது. ‌பிர‌ண்டையை ந‌ன்கு வத‌‌க்‌கி பு‌ளியுட‌ன் சே‌ர்‌த்து சமை‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் நா‌வி‌ல் அ‌ரி‌ப்பையு‌ம், வ‌யி‌ற்‌‌றி‌ல் எ‌ரி‌ச்சலையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். மு‌ற்‌றியதாக அ‌ல்லாம‌ல் இள‌ந்த‌ண்டை பய‌ன்படு‌த்தலா‌ம். இதனை‌ப் ப‌றி‌க்கு‌ம்போது கை‌யி‌ல் தே‌ங்கா‌‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ண்டு ப‌றி‌த்தா‌ல் கை‌யி‌ல் அ‌ரி‌ப்பு உ‌ண்டாகாது. ‌பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம்,கேரா‌ட்டி‌ன் ம‌ற்று‌ம் ‌வை‌ட்ட‌மி‌ன் ‌சி அட‌ங்‌‌கியு‌ள்ளது. எலு‌ம்பு வள‌ர்‌ச்‌‌சி‌க்கு ‌பிர‌ண்டை அ‌திகமாக பய‌ன்படு‌ம். இய‌ற்கை வைத்தியம் சுளு‌க்கு ‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு வை‌த்‌திய‌ம் ‌திடீரெ‌ன்று சுளு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு, அதனா‌ல் ‌வீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌பிர‌ண்டை ‌நி‌ச்சயமாக உதவு‌ம். ‌பிர‌ண்டையை இடி‌த்து, சாறெடு‌த்து, அதனுட‌ன் ‌சி‌றிது பு‌ளியு‌ம், உ‌ப்பு‌ம் சே‌ர்‌த்து குழ‌ம்பு பதமாக கா‌ய்‌ச்‌சி, பொறு‌க்க‌க் கூடிய சூ‌ட்டி‌ல் ப‌ற்று‌ப் போ‌ட்டு வர இர‌ண்டொரு நா‌ட்க‌ளி‌ல் குணமாகு‌ம். சு‌ளு‌க்கு ம‌ற்றும அடி ப‌ட்ட ‌வீ‌க்க‌ம் குணமாக, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவரலா‌ம். ‌ பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம் அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு வள‌ர்‌ச்‌சி‌க்கு அ‌திக‌ம் உதவு‌ம். எனவே, கா‌ல்‌சிய‌‌ம் குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ‌பிர‌ண்டையை அ‌திகமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். ‌பிர‌ண்டை துவைய‌ல், ‌பிர‌ண்டை வ‌ற்ற‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம். ‌பிர‌ண்டை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம் ‌பிர‌ண்டையை நெ‌ய்‌வி‌ட்டு வத‌ற்‌கி, துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டு வர ந‌ல்ல ப‌சி உ‌ண்டாகு‌ம். ‌பிர‌ண்டை, க‌ற்றாழை வே‌ர்,‌நீ‌ர் மு‌ள்‌ளி வே‌ர், பூ‌ண்டு, சு‌க்கு, ‌மிளகு, கடு‌க்கா‌ய் சம அளவு எடு‌த்து அரை‌த்து மோ‌‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்து வர உ‌ள் மூல‌ம் குணமாகு‌ம். எலு‌ம்பு மு‌றிவு‌க்கு, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவர, மு‌றி‌ந்த எலு‌ம்புக‌ள் ‌விரை‌வி‌ல் கூடு‌ம். ‌ பிர‌ண்டையை ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் இ‌ட்டு வத‌க்‌கி சாறு ‌பி‌ழி‌ந்து 20 - 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர முறைய‌ற்ற மாத‌வில‌க்கு ‌சீராகு‌ம். ‌ பிர‌ண்டையை ‌தூளா‌க்‌கி மோ‌ரி‌ல் ஊற வை‌த்து காலை‌யி‌ல் ம‌ட்டு‌ம் 2-3 நா‌ட்க‌ள் குடி‌த்து வர பெரு‌‌ங்க‌ழி‌ச்ச‌ல் குணமாகு‌ம். மாத‌வில‌க்கு வ‌லி குறைய மாத‌வில‌க்கு சமய‌ங்க‌ளி‌ல் பெ‌ண்களு‌க்கு கடுமையான வ‌யி‌ற்‌று வ‌லி உ‌ண்டாகு‌ம். இத‌ற்கு வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரைகளை அ‌திக அள‌‌வி‌ல் பெ‌ண்க‌ள் சா‌ப்‌‌பிடுவா‌ர்க‌ள். இத‌ற்கு ‌வ‌லி ‌நிவார‌ணிக‌ள் உக‌ந்தது அ‌ல்ல‌. இத‌ற்கு ‌பிர‌ண்டை உ‌ப்பு ந‌ல்ல ‌தீ‌ர்வு அ‌ளி‌க்கு‌ம். நா‌ட்டு மரு‌ந்து கடைக‌ளி‌ல் ‌‌பிர‌ண்டை உ‌ப்பு எ‌ன்று கேட‌்டு வா‌ங்‌கி வை‌த்‌திரு‌ங்க‌ள். இதனை ‌தினமு‌ம் 250 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் அள‌வி‌ற்கு எடு‌த்து வெ‌ண்ணெ‌யில‌் குழை‌த்து ‌தினமு‌ம் இரு வேளை உ‌ட்கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். இ‌வ்வாறு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் மாத‌வில‌க்கு சம‌ய‌ங்க‌ளி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் வ‌யி‌ற்று வ‌லி பெருமளவு குறையு‌ம். இதே‌ப் ‌பிர‌ண்டை உ‌ப்பை 200 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் அளவு எடு‌த்து, ஜா‌தி‌க்கா‌ய் சூரண‌ம் 500 ‌மி‌ல்‌லி அளவுட‌ன் நெ‌ய்‌யி‌ல் குழை‌த்து இரு வேளை சா‌ப்‌பி‌ட்டு வர நர‌ம்பு‌த் தள‌ர்‌ச்‌சி குணமாகு‌ம். ர‌த்த மூல‌த்‌தி‌ற்கு ‌பிர‌ண்டை ர‌த்த மூல‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ வை‌த்‌தி‌ய‌ம் செ‌ய்தாலு‌ம் எதுவு‌ம் ச‌ரியாக வ‌ந்‌திரு‌க்காது. நோயு‌ம் குணமா‌கி‌யிரு‌க்காது. ஆனா‌ல் ர‌த்த மூல‌‌த்‌தி‌ற்கு ‌பிர‌ண்டை கைக‌ண்ட மரு‌ந்தாகு‌ம். இள‌ம் ‌பிர‌ண்டையை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி, அதனை நெ‌ய்‌வி‌ட்டு வத‌க்கு ந‌ன்கு அரை‌க்கவு‌ம். இ‌ந்த ‌விழுதை ‌சிறு நெ‌ல்‌லி‌க்கா‌ய் அள‌வி‌ற்கு உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இதனை காலை, மாலை எ‌ன்று இரு வேளைகளு‌ம் சா‌ப்‌பிட‌்டு வர ர‌த்த மூல‌ம் குணமாகு‌ம். இ‌ந்த உரு‌ண்டைகளை அ‌திக நா‌ட்க‌ள் வை‌த்‌திரு‌க்க வே‌ண்டா‌ம். அ‌வ்வ‌ப்போது இதனை செ‌ய்து சா‌ப்‌பிடுவது‌ம் ந‌ல்லது. ர‌த்த மூல‌ம் உடனடியாக ‌தீ‌‌ர்வு பெறு‌ம். உடல் தேற சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும். வயிற்றுப் பொருமல் நீங்க வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும். இரத்த மூலநோய் குணமாக மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும். செரிமான சக்தியைத் தூண்ட சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும். முதுகு வலி, கழுத்து வலி குணமாக சிலர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இவர்களின் எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர். இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். எலும்பு முறிவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். இதயம் பலப்பட உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர் களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும். பிரண்டை உப்பு -: பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும். பேதி, வாந்தி -: குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும். வாய்ப்புண் - :வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும். வயிற்றுப்புண் -: தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேழை சாப்பிட குணமாகும். மூலம் -:நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 24 -48 நாள் இரு வேழை கொடுக்க குணமாகும். பிரண்டை பற்பம் - : 300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம். உடல் பருமன் -: பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும். ஆஸ்துமா -: இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும். சூதகவலி - : மூன்று வேழை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும். தாதுநட்டம் -: பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும். செரியாமை -: பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும். நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும். பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேழையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும். காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்கஇந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும். பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும். முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம். பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேழைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும். பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.

Related

இய‌ற்கை வைத்தியம் 8113464125220734131

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item