கூர்கி பிரியாணி---சமையல் குறிப்பு
கூர்கி பிரியாணி தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 2 கப் மட்டன் - 400 கிராம் மிளகு - 8 தேங்காய் - 1/2 கப் சாம்பார் வெங்காயம் - 3 கொத்தமல்லி...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_1782.html
கூர்கி பிரியாணி
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 2 கப்
மட்டன் - 400 கிராம்
மிளகு - 8
தேங்காய் - 1/2 கப்
சாம்பார் வெங்காயம் - 3
கொத்தமல்லி இலை - 1 கப் (நறுக்கியது)
முந்திரி பருப்பு - 1/2 கப்
எண்ணெய் - 100 மில்லி
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* அரிசியைக் கழுவி நீரை வடிக்கவும். ஒரு வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகைச் சேர்க்கவும். அரிசியையும், சிறிது உப்பையும் சேர்த்து வறுக்கவும்.
* 4 கப் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் அரிசி வேகும்வரை வைத்திருக்கவும்.
* பிரஷர் குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். தொடர்ந்து மசாலாத்தூள் மற்றும் மற்ற பொருட்களைச் சேர்த்து வறுக்கவும்.
* இப்போது மட்டன், போதுமான உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் எடுத்து அகலமான டிரேயில் போட்டு அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறவும். இதை பாத்திரத்தில் போட்டு தம் கட்டி சிறிது நேரம் வைக்கலாம். அல்லது ஓவனில் குறைந்த வெப்ப நிலையில் 5 நிமிடங்கள் வைக்கலாம்.
* இந்த கூர்கி பிரியாணியை வறுத்த முந்திரிப்பருப்பு, கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்தால் பார்க்கவும், சுவைக்கவும் சூப்பராக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------
Post a Comment