ஆப்பிள் சூப்....உடலுக்கு வலிவு தரும் சூப்கள்
ஆப்பிள் சூப் தேவையான பொருட்கள் பெரிய ஆப்பிள் - 1 தக்காளி - 200 கிராம் மிளகு - 15 சீரகம் - 1 டீஸ்பூன் மைதாமாவு - 1/2 டீஸ்பூன் பால் - 1 கப் ...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_5810.html
ஆப்பிள் சூப்
தேவையான பொருட்கள்
பெரிய ஆப்பிள் - 1
தக்காளி - 200 கிராம்
மிளகு - 15
சீரகம் - 1 டீஸ்பூன்
மைதாமாவு - 1/2 டீஸ்பூன்
பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* தக்காளியை வேக வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். ஆப்பிளை காரட் துருவியால் துருவி, பால் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்த ஆப்பிள் துருவல், வெந்த தக்காளி இரண்டையும் ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும். மைதா மாவை வெறும் வாணலியில் வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கலக்கி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கவும்.
* தக்காளி- ஆப்பிள் ஜுசுடன், மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர்விட்டு சூடாக்கி மைதா மாவுக் கரைசலை ஊற்றி இறக்கி வைக்கவும்.
* நெய்யில் வறுத்த பிரட் துண்டுகள் அல்லது சூப் ஸ்டிக்களுடன் பரிமாறவும்.
குறிப்பு
* விருந்தின்போது பரிமாறுவதற்கு ஏற்ற ரிச்சான சூப் இது.
* வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடு தேவைப்படாத நேரத்தில் கூட எடுத்துக் கொள்ளக் கூடிய சத்தான சூப் இது.
* கப்பின் ஓரத்தில் சிறு ஆப்பிள் துண்டை சொருகி அலங்கரிக்கலாம்.
Post a Comment