பிரண்டை குழம்பு -- சமையல் குறிப்பு
நாஞ்சில் நாட்டு பிரண்டை குழம்பு தேவையான பொருட்கள்: இளம் பிரண்டை தண்டு-250 கிராம், சுத்தம் செய்த புளி-100 கிராம், மிளகாய்தூள்-15 கிராம், இ...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_3961.html
நாஞ்சில் நாட்டு பிரண்டை குழம்பு
தேவையான பொருட்கள்: இளம் பிரண்டை தண்டு-250 கிராம்,
சுத்தம் செய்த புளி-100 கிராம்,
மிளகாய்தூள்-15 கிராம்,
இஞ்சி-15 கிராம்,
மிளகுதூள்-25 கிராம்,
முற்றிய தேங்காய்பால்-1 கப்,
சின்னவெங்காயம்-125 கிராம்,
தக்காளி-100 கிராம்,
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி,
சீரகதூள்-1 தேக்கரண்டி,
கடுகு-1 தேக்கரண்டி,
வெந்தயம்-1 தேக்கரண்டி,
தேங்காய் எண்ணெய்-4 தேக்கரண்டி (தாளிக்க),
உப்பு - தண்ணீர் - தேவைக்கு.
செய்முறை:
நன்றாக மிக்சியில் அடித்த பிரண்டை தண்டை புளி கரைத்த தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
இத்துடன் சீரகபொடி, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி, மிளகுபொடி, மிக்சியில் அடித்த வெள்ளை பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலக்கி, தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தேங்காய் எண்ணெயில் வதக்கி போடவும்.
தேங்காய்பாலை ஊற்றி கலக்கி கொதிக்க விடவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
வட்ட துண்டுகளாக வெட்டிய தக்காளியை போட்டு இறக்கவும்.
எந்த உணவையும் அதிக சூட்டிலோ, அதிக குளிரிலோ சாப்பிட்டால் அதன் சுவை தெரியாது.
எனவே மூடி வைத்து ஒரு மணிநேரம் கழித்து பரிமாறவும்.
சுடுசோற்றுக்கு ஏற்ற வலுவான சைட் டிஷ் இது. இட்லி, தோசை, சப்பாத்தி, பிரட் சாண்ட்விச் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அமர்க்களமாக இருக்கும். உடம்புக்கு வலுவும் வனப்பும் தரும் காரணிகள் அடங்கியது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது
Post a Comment