பிரண்டை துவையல் -- சமையல் குறிப்பு
பிரண்டை துவையல் நறுக்கிய பிரண்டை - கால் கப் மிளகாய் வற்றல் - 3 தேங்காய் துருவல் - கால் கப் உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_4479.html
பிரண்டை துவையல்
நறுக்கிய பிரண்டை - கால் கப்
மிளகாய் வற்றல் - 3
தேங்காய் துருவல் - கால் கப்
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4 கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். பிரண்டையை தண்ணீர் ஊற்றி அலசி, சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் கறிவேப்பிலை, பிரண்டை இரண்டையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
இவை நன்கு வதங்கியதும் அதனுடன் தேங்காய் துருவல், புளி, உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுக்கவும்.
இதை சாதத்துடன் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
Post a Comment