குறைந்த செலவில் கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்! குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!
நாட்டுக்கோழிகளுக்கு மூலிகை மருந்துகள் கொடுப்பது குறித்து, இந்த துறையில் அனுபவம் வாய்ந்த டாக்டர் புண்ணியமூர்த்தியிடம் பேசினோம். “நாட்டுக்க...

நாட்டுக்கோழிகளுக்கு மூலிகை மருந்துகள் கொடுப்பது குறித்து, இந்த துறையில் அனுபவம் வாய்ந்த டாக்டர் புண்ணியமூர்த்தியிடம் பேசினோம்.
“நாட்டுக்கோழிகளுக்கும் பிராய்லர் கோழிகள்போல ஆங்கில மருந்துகளை பயன்படுத்தும் பழக்கம் உருவாகி வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கில் செலவும் செய்கிறார்கள். ஆனால், நம் மூலிகை மருத்துவத்தில் குறைந்த செலவில் கோழிகளின் நோயை விரட்ட முடியும். உதாரணத்துக்கு வெள்ளைக்கழிச்சல் நோயைத்தடுக்க... ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கீழாநெல்லி ஆகியவற்றை இடித்துத் தூளாக்கி, தனியாகவோ, அரிசி குருணையோடோ கலந்து கொடுக்க வேண்டும். இது 10 கோழிகளுக்கான அளவு. 3 முதல் 5 நாள்களுக்குக் கொடுத்துவந்தால் போதுமானது. கோழிகள், கோழிக் குஞ்சுகளுக்கு வரும் அத்தனை நோய்களுக்கும் இயற்கை மருத்துவம் இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் என்னை அழைக்கலாம்” என்று அழைப்புவிடுத்தார்.
தொடர்புக்கு, செல்போன்: 98424 55833.
Post a Comment