மிக்ஸ்டு துவையல்--சமையல் குறிப்பு
மிக்ஸ்டு துவையல் தேவையானவை: மல்லித்தழை : 1 கட்டு புதினா : 1 கட்டு கறிவேப்பிலை : 1 கப் இஞ்சி : 1 பொ¢ய துண்டு தாளிக்கும் வடகம் : 1 டேபிள்ஸ்ப...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_2256.html
மிக்ஸ்டு துவையல்
தேவையானவை:
மல்லித்தழை : 1 கட்டு
புதினா : 1 கட்டு
கறிவேப்பிலை : 1 கப்
இஞ்சி : 1 பொ¢ய துண்டு
தாளிக்கும் வடகம் : 1 டேபிள்ஸ்பூன்
புளி : சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு : தேவைக்கு
எண்ணெய் : 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் : 8
கடுகு : 1 டீஸ்பூன்
செய்முறை:
கறிவேப்பிலை, மல்லி, புதினாவை சுத்தம் செய்யுங்கள். நன்கு அலசுங்கள். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, மிளகாயை வறுத்து எடுங்கள். இஞ்சியைப் பொடியாக நறுக்கி, மிளகாய் வறுத்த எண்ணெயிலேயே வதக்கிக்கொள்ளுங்கள். மீதமுள்ள எண்ணெயில் வடகத்தை பொ¡¢யுங்கள் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்த, கறிவேப்பிலை, புதினா, மல்லியை வதக்கி எடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக உப்பு, புளி சேர்த்து அரையுங்கள் மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து, கடுகுக் தாளித்து, அரைத்து விழுதைச் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
Post a Comment